Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஐ.எஸ் அமைப்பின் வெள்ளை விதவை பலி அமெரிக்க விமானத்தின் குறி தப்பவில்லை

In உலகம்
Updated: 17:41 GMT, Oct 12, 2017 | Published: 16:32 GMT, Oct 12, 2017 |
0 Comments
1770
This post was written by : Sivaguru Siva

பிரித்தானிய அரசினால் அதிதீவிரமாக தேடப்பட்டு வந்தவரும் வெள்ளை விதவை என்ற அடைமொழியை பெற்றவருமான  சாலி ஜோன்ஸ் சிரியாவில் கொல்லப்பட்டுள்ளதாக செய்திகள் வந்துள்ளன.

முன்னாள் பாடகியான சாலி ஜோன்ஸ் பின்னர் இஸ்லாமிய ஜிகாதியாக மாறி ஐ. எஸ் அமைப்பு ஆட்சேர்ப்பில் ஈடுபட்டவர். இதனால் அவரை முக்கியமான ஐ. எஸ் பயங்கவாதியாக கருதி மேற்குலக நாடுகள் தீவிரமாக தேடிவந்தன.

2013 இல் பிரித்தானியாவிலிருந்து தனது மகனுடன் சிரியாவுக்கு தப்பிச்சென்ற சாலி ஜோன்ஸ் அங்கு ஐ.எஸ் ஆயுததாரியொருவரை மணஞ் செய்திருந்தார். இதன் பின்னர் அவரது கணவரும் தாக்குதல் ஒன்றில் கொல்லப்பட்டார்.

இதன் பின்னர் கடந்த யூன்மாதம் சிரியாவில் நடத்தபட்ட அமெரிக்காவின் வான்வழித்தாக்குதல் ஒன்றில் தனது மகனுடன் சாலி ஜோன்ஸ் சிரியாவில் கொல்லப்பட்டதாக குறிப்பிடப்படுகின்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg