Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

ஒரே பார்வையில் இன்றைய உலகச் செய்திகள்

In
Updated: 16:44 GMT, Oct 12, 2017 | Published: 16:44 GMT, Oct 12, 2017 |
0 Comments
1114
icon_com
This post was written by : Sivaguru Siva
_91925459_gettyimages-461884612

யுனெஸ்கோ எனப்படும் ஐக்கிய நாடுகள் சபையின் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு அமைப்பில் இருந்து விலகுவதாக அமெரிக்கா இன்று அறிவித்துள்ளது

இஸ்ரேல் மற்றும் தனது நாட்டின் மீது யுனெஸ்கோ அமைப்பு ஒரு தலைப்பட்சமாக நடந்து கொள்வதான குற்றச்சாட்டுடன் அமெரி;க்கா இந்த முடிவை எடுத்துள்ளது.

இதனடிப்படையில் யுனெஸ்கோவிலிருந்து அடுத்த ஆண்டு டிசம்பரில் அமெரிக்கா முற்றாக விலகிக்கொள்ளும்.

பரிஸ் நகரை தலைமையகமாகக் கொண்ட யுனெஸ்கோ அமைப்பின் வரவு செலவுத்திட்டத்துக்கு அமெரிக்கா 20வீத நிதியை வழங்குவது குறிப்பிடத்தக்கது.

யுனெஸ்கோ அமைப்பை உருவாக்கிய நாடுகளில் அமெரிக்காவும் ஒன்று

4161

எதிர்பார்த்த திருப்தியுடன் தற்போதைய பிரெக்சிற் பேச்சுக்களின் முடிவுகள் அமையவில்லையென  பிரெக்ஸிற் தொடர்பான ஐரோப்பிய ஒன்றியத்தின் பேச்சுக்குழுவின் தலைவர் மிசேல் பானியர் அறிவித்துள்ளார்.

ஐந்தாம்சுற்று பிரெக்சிற் பேச்சுக்களின்முடிவில் இதனைத்தெரிவித்த அவர்  பேச்சுக்கள் தற்போதும் இறுக்கமான நிலையில் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மிசேல் பானியேரின் இந்தக்கருத்தை அடுத்து பிரித்தானிய பவுண்ஸ்நாணயத்தின்  மதிப்பு வீழ்ந்துள்ளது.

4221396001_5491871810001_5491868356001-vs

பிரித்தானிய அரசினால் அதிதீவிரமாக தேடப்பட்டு வந்தவரும் வெள்ளை விதவை என்ற அடைமொழியை பெற்றவருமான  சாலி ஜோன்ஸ் சிரியாவில் கொல்லப்பட்டுள்ளதாக செய்திகள் வந்துள்ளன.

முன்னாள் பாடகியான சாலி ஜோன்ஸ் பின்னர் இஸ்லாமிய ஜிகாதியாக மாறி ஐ. எஸ் அமைப்பு ஆட்சேர்ப்பில் ஈடுபட்டவர். இதனால் அவரை முக்கியமான ஐ. எஸ் பயங்கவாதியாக கருதி மேற்குலக நாடுகள் தீவிரமாக தேடிவந்தன.

2013 இல் பிரித்தானியாவிலிருந்து தனது மகனுடன் சிரியாவுக்கு தப்பிச்சென்ற சாலி ஜோன்ஸ் அங்கு ஐ.எஸ் ஆயுததாரியொருவரை மணஞ் செய்திருந்தார். இதன் பின்னர் அவரது கணவரும் தாக்குதல் ஒன்றில் கொல்லப்பட்டார்.

இதன் பின்னர் கடந்த யூன்மாதம் சிரியாவில் நடத்தபட்ட அமெரிக்காவின் வான்வழித்தாக்குதல் ஒன்றில் தனது மகனுடன் சாலி ஜோன்ஸ் சிரியாவில் கொல்லப்பட்டதாக குறிப்பிடப்படுகின்றது.

_93045079_kidnap

கடந்த 5 வருடங்களாக ஆப்கானில் தலிபான்களின் பிடியில் பணயக்கைதிகளாக தடுத்து வைக்கப்பட்ட வட அமெரிக்க குடும்பம் ஒன்று இன்று பாகிஸ்தானிய படையினரால் அதிரடியாக விடுவிக்கப்பட்டுள்ளது.

கனேடியரான ஜோசுவா போயல் மற்றும் அவரது அமெரிக்க துணைவி கெய்த்லான் கோல்மன் மற்றும் அவர்களது முன்று பிள்ளைகளே இவ்வாறு ராணுவ நடவடிக்கை மூலம் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

அமெரிக்கா வழங்கிய புலனாய்வுத்தகவல்களின் அடிப்படையில் ஆப்கான் எல்லைப்பகுதியில் அதிரடி ராணுவ நடவடிக்கையொன்றை செய்த பாகிஸ்தான் படையினர் இவர்களை விடுவித்துள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

*

  

  

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)