Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

முருங்கைப்பூ தேநீர் அருந்துவதால் இத்தனை நோய்களை தீர்க்க முடியுமா?

In
Updated: 12:29 GMT, Oct 13, 2017 | Published: 12:26 GMT, Oct 13, 2017 |
0 Comments
1290
icon_com
This post was written by : Anojkiyan
muru

முருங்கை காயை போலவே முருங்கைப்பூ தேநீரில் ஏராளமான மருத்துவகுணங்கள் அடங்கியுள்ளன. முதலில் முருங்கைப்பூ தேநீர் செய்வது எப்படி என்று பார்க்கலாம்…

செய்முறை: முருங்கைப்பூவை தண்ணீரில் இட்டு நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். இந்த தேநீர் நன்றாக கொதித்த உடன் இதில் கற்கண்டு சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். இதனை பாலில் இட்டு கொதிக்க வைத்தும் பயன்படுத்தலாம்.

முருங்கைப்பூ தேநீரில் உள்ள மருத்துவகுணங்கள்:

முருங்கைப்பூவில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக உள்ளது. இது பாக்டீரியா, வைரஸ்கள் மற்றும் பூஞ்சைகளை எதிர்க்கும் ஆற்றலை கொண்டுள்ளது. இதனால் காய்ச்சல், சளி, உடலில் உண்டாகும் பூஞ்சை பாதிப்புகள் தடுக்கப்படுகின்றது.

சிலருக்கு இரவு நேரத்தில் நான்கு, ஐந்து தடவைகள் கூட சிறுநீர் கழிக்க வேண்டிய நிலை ஏற்படும். இதிலிருந்து விடுபட வேண்டுமென்றால், இந்த முருங்கைப்பூ தேநீரை பருகலாம்.

வெள்ளைப்போக்கு உடலுக்கு தேவையற்ற சுரப்பிகளால் ஏற்படுகிறது. வெள்ளைப்போக்கை கட்டுப்படுத்த இந்த முருங்கைப்பூ தேநீர் பயன்படுகிறது.

சர்க்கரை நோய் பாதிப்பு உள்ளவர்களுக்கு இந்த முருங்கைப்பூ தேநீர் அறுமருந்தாக பயன்படுகிறது. இது சர்க்கரையை கட்டுப்படுத்த உதவுகிறது.

இந்த முருங்கைப்பூ தேநீரை காய்ச்சல், சளி போன்ற பாதிப்புகளில் இருந்தும் விடுபட முடிகிறது. உடலுக்கு இது நோய் எதிர்ப்பு சக்தியை தருகிறது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg