Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

யுனெஸ்கோவின் புதிய தலைவராக பிரான்ஸின் முன்னாள் அமைச்சர்

In ஐரோப்பா
Updated: 06:36 GMT, Oct 14, 2017 | Published: 06:36 GMT, Oct 14, 2017 |
0 Comments
1305
This post was written by : Suganthini

யுனெஸ்கோ அமைப்பின் புதிய தலைவராக பிரான்ஸின் முன்னாள் கலாச்சாரத்துறை அமைச்சர் ஆட்ரே அஸவுலே (Audrey Azoulay) தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

இந்த அமைப்பின் தலைவராக கடந்த 2009ஆம் ஆண்டு முதல் இதுவரைகாலமும் பல்கேரியா நாட்டைச் சேர்ந்த இரினா பொகொவா பதவி வகித்து வந்தார்.

இவரது பதவிக்காலம் முடிவடையவுள்ள நிலையில், புதிய தலைவரை தெரிவுசெய்யும் வாக்கெடுப்பு, பிரான்ஸில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது. இதில் யுனெஸ்கோ அமைப்பின் உறுப்பு நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்று வாக்களித்தனர்.

பிரான்ஸின் முன்னாள் கலாச்சாரத்துறை அமைச்சர் ஆட்ரே அஸவுலேவும், அவரை எதிர்த்து கதாரின் ஹமத் பின் அப்துல் அஜிஸ் அல் கவாரியும் போட்டியிட்டனர்.

இதில் ஆட்ரேவுக்கு 30 வாக்குகளும், அப்துல் அஜிசுக்கு 28 வாக்குகளும் கிடைத்தன. இதையடுத்து ஆட்ரே வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg