Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இரசாயனத் தாக்குதல் விசாரணையால் சிரமத்தை எதிர்நோக்கியுள்ளோம் – ரஷ்யா

In உலகம்
Published: 08:29 GMT, Oct 14, 2017 |
0 Comments
1188
icon_com
This post was written by : Suganthini
russia

சிரியாவில் இடம்பெற்றதாகக் கூறப்படும் இரசாயனத் தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணையின் மூலம் கடுமையான பிரச்சினையை தாம் எதிர்நோக்கியுள்ளதாக ரஷ்யா வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

நியூயோர்க்கில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபைத் தலைமையகத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போதே, ரஷ்யா வெளிவிவகார அமைச்சு இதனைக் கூறியுள்ளது.

இது தொடர்பில் ரஷ்ய வெளிவிவகார அமைச்சு மேலும் தெரிவித்தபோது, ‘சிரியாவில் இடம்பெற்ற மோதலின்போது, இரசாயனத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை  தொடர்பில் சர்வதேச விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த விசாரணையை ஐக்கிய நாடுகள் சபையும் இரசாயன ஆயுதங்களைத் தடை செய்வதற்கான அமைப்பும் முன்னெடுத்துள்ளது. இந்த விசாரணையின் மூலம் நாம் கடுமையான பிரச்சினையை எதிர்நோக்கி வருகின்றோம்’ எனத் தெரிவித்துள்ளது.

சிரியாவில் கடந்த 2014ஆம், 2015ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் 3 தடவைகள் குளோரின் எரிவாயு எனப்படும் இரசாயனத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை தொடர்பாக  விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg