Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

காணிகளை இந்தியாவிற்கு விற்கவில்லை: லக்ஸ்மன்!

In இலங்கை
Updated: 15:20 GMT, Oct 14, 2017 | Published: 09:05 GMT, Oct 14, 2017 |
0 Comments
1166
icon_com
This post was written by : Ravivarman
DSC05462

நாங்கள் காணிகளை இந்தியாவிற்கு விற்கவில்லை, நீண்டகாலக் குத்தகைக்கே கொடுத்துள்ளோம் என உயர்கல்வி மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

மட்டக்களப்பு ஆரையம்பதி கோவில்குளத்தில் உள்ள தேசிய தொழில்நுட்ப கல்லூரியை, உயர் தேசிய தொழில் நுட்ப கல்லூரியாக தரமுயர்த்தும் நிகழ்வும், கல்லூரியின் கட்டிட திறப்பு விழாவும் இன்று (சனிக்கிழமை) காலை நடைபெற்றது.

இதில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், “தமிழ் தேசியக் கூட்டமைப்பு இந்த அரசியல் அமைப்பு மாற்றத்திற்கு மிகவும் உதவியாக இருந்து வருகின்றனர். இந்த அரசியல் அமைப்பு மாற்றமானது தனி ஒரு நபரது வரைவு அல்ல எல்லோரும் இணைந்து மேற்கொள்ளும் செயற்பாடாகும்.

கிழக்கு மாகாணத்திற்கு அதிவேகப்பாதை அமைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. தற்போது அதற்கான கள ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேலும் ஜனவரியில் உள்ளூராட்சி தேர்தல் வருகின்றது. ஜனநாயக ரீதியாக உங்களது பிரதிநிதிகளைத் தெரிவு செய்யும் நிலை உருவாக்கப்பட்டுள்ளது.

அத்துடன், பெண்களுக்கு 25 வீதம் வழங்க வேண்டும் என்பதில் எமது பிரதமர் உறுதியாகவிருக்கின்றார். இன்று பெண்கள் அனைத்து இடங்களிலும் முன்னிலையில் உள்ளார்கள்” என லக்ஸ்மன் கிரியெல்ல மேலும் தெரிவித்தார்.

DSC05424 DSC05387 DSC05382 DSC05377 DSC05372 DSC05367 DSC05351 DSC05347

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg