Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கணவாய் பொரியல்

In
Updated: 10:13 GMT, Oct 14, 2017 | Published: 10:04 GMT, Oct 14, 2017 |
0 Comments
1648
icon_com
This post was written by : Vithushagan

தேவையான பொருட்கள்

கணவாய்- 1 கிலோ
பெரிய வெங்காயம் – 250 கிராம்
பச்சை மிளகாய்- 6
கறிவேப்பிலை – சிறிதளவு
மஞ்சள் தூள் -2 தேக்கரண்டி
மிளகாய் தூள்- 4 தேக்கரண்டி
உப்பு -தேவையானளவு
தக்காளி சாஸ் -4 மேசைக்கரண்டி
எண்ணெய் -சிறிதளவு
வாசனைச்சரக்குத்தூள் – 1 தேக்கரண்டி

செய்முறை 

முதலில் கணவாயை சுத்தம் செய்து வட்ட வடிவில் வெட்டிக்கொள்ளவும் ,ஓர் பாத்திரத்தில் மஞ்சள் தூள், உப்பு, எண்ணெய் சேர்த்து நன்கு அவித்தெடுக்கவும்.

பெரிய வெங்காயத்தை சுத்தம் செய்து நீள வாக்கில் வெட்டிக்கொள்ளவும்,  அதன் பின்னர் ஓர் பாத்திரத்தில் எண்ணெய் விட்டு நன்கு சூடானதும் வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும்.  வெங்காயம் அரைப்பதம் வெந்ததும் மிளகாய் தூள் சேர்த்து நன்கு கலக்கவும்.  அதனுள் அவித்த கணவாய் சேர்த்து நன்றாக கிளறி தக்காளி சோஸ், உப்பு, வாசனைசரக்குத்தூள் சேர்த்து நன்றாக கிளறி இறக்கவும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg