Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கட்சி நலனுக்காகவே அரசியல் யாப்பை உருவாக்கினார்கள்: ஐங்கரன்

In இலங்கை
Published: 10:11 GMT, Oct 15, 2017 |
0 Comments
1178
icon_com
This post was written by : Ravivarman
K. Aingkaran Lawyer

இலங்கையில் அரசியல் யாப்பை உருவாக்கியவர்கள் நாட்டு மக்களின் நலனைப் புறக்கணித்து விட்டு தங்களுடைய கட்சி நலனுக்காகவே அதனை வடிவமைத்தார்கள் என தேசிய சமாதானப் பேரவை வளவாளர் சட்டத்தரணி கே. ஐங்கரன் தெரிவித்துள்ளார்.

புதிய அரசியலமைப்புச் சீர்திருத்தம் தொடர்பாக நேற்றையதினம் (சனிக்கிழமை) மாவட்ட சர்வ மதப்பேரவை உறுப்பினர்களுக்குத் தெளிவூட்டும் கருத்தரங்கில் உரையாற்றும்போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“புதிய அரசியலமைப்புச் சீர்திருத்தத்தில் சிறுபான்மை, பெரும்பான்மை அற்ற, முழு இலங்கைக்கும் அனைவரும் உரித்து என்ற பொறிமுறையை நோக்கி சிறுபான்மை சிந்திப்பதே சிறந்தது.

அரசியல்வாதிகள் தங்களுடைய இருப்புக்காகவும், அரசியல் காரணங்களுக்காகவும், பூகோள அரசியலின் நிலைமைகளுக்கேற்ற விதத்திலும் அந்தத் தருணத்திற்கு ஏற்ற மாதிரி நிலைமைகளை உருவாக்கிக் கொள்வார்கள்.

ஆனால் மக்களாகிய நாங்கள் அவர்கள் இழுக்கும் பக்கமெல்லாம் அசைந்தாட முடியாது. என்னுடைய இன அடையாளம் அவருடைய இன அடையாளம் எந்த அந்தஸ்தில் இருக்க வேண்டும் என்று வேறெதற்கோ வாதாடாமல் எல்லோரும் சமனாக அடையாளப்படுத்தப்பட வேண்டும் என்றுதான் மக்கள் திடமான உறுதியான நிலைப்பாட்டில் இருந்து கொள்ள வேண்டும்.

இலங்கையில் இடத்துக்கேற்ற பெரும்பான்மை ஆட்சியும் நிருவாகமும் என்று கோரும்பொழுது அந்தப் பிரதேசத்திற்கு அப்பாற்பட்ட இடத்தில் நமக்கு எந்த வித உரிமையும் இல்லை என்றாகிவிடுகின்றது.

அவ்வாறான போக்கே தேசிய அரசியலிலும் பிரதிபலிக்கும். அது ஆபத்தானது. பிரதேசத்தவர்கள் பெரும்பான்மை என்றால் தேசிய அரசியலில் பெரும்பான்மைக்கான அங்கீகாரம் இயல்பாகவே கிடைத்து விடும்” என கே. ஐங்கரன் மேலும் தெரிவித்துள்ளார்.

DSC08377 DSC08368 DSC08358 DSC08342 DSC08335

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg