Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மட்டக்களப்பில் வெள்ளைப்பிரம்பு தின நிகழ்வு!

In இலங்கை
Published: 10:37 GMT, Oct 15, 2017 |
0 Comments
1107
icon_com
This post was written by : Ravivarman

மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான வெள்ளைப்பிரம்பு தின நிகழ்வுகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை ஆரையம்பதியில் நடைபெற்றன.

கிழக்கு மாகாண விவசாய, கூட்டுறவு, சமூகசேவைகள் அமைச்சு, ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலை மற்றும் உதயம் விழிப்புலனற்றோர் சங்கம், கல்முனை அரிமா சங்கம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வுகள் நடைபெற்றன.

இதனையொட்டி ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலையில் இருந்து விழிப்புலனற்றோர் வெள்ளைப்பிரம்புகளுடன் கலந்துகொள்ள இந்த ஊர்வலம் கல்முனை மட்டக்களப்பு பிரதான வீதியுடாக ஆரையம்பதி நந்தகோபன் கலாசார மண்டபம் வரையில் நடைபெற்றது.

மேற்படி விழிப்புணர்வு ஊர்வலத்தில் மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி ச.நமசிவாயம் உட்பட பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டனர்.

வழித்துணைக்கு விழித்துணையாகும் வெண் பிரம்பு என்னும் தலைப்பில் இந்த விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

DSC05620 DSC05614 DSC05613 DSC05591 DSC05586 DSC05583 DSC05571 DSC05568 DSC05561

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg