Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மட்டக்களப்பு தொகுதி அமைப்பாளராக ஷிப்லி பாறூக் நியமனம்!

In இலங்கை
Published: 10:49 GMT, Oct 15, 2017 |
0 Comments
1322
icon_com
This post was written by : Ravivarman
Shibly Farook

கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் ஷிப்லி பாறூக், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு தொகுதிக்கான அமைப்பாளராக அக்கட்சியின் தலைவர் றவூப் ஹக்கீமினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

காத்தான்குடியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கட்சி முக்கியஸ்தர்களுடனான கலந்துரையாடலின்போது இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டு மேற்படி நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

இக்கலந்துரையாடலின்போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், நகர திட்டமிடல் நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சருமான றவூப் ஹக்கீம், கட்சியின் பிரதித்தலைவரும், கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சருமான செய்னுலாப்தீன் நஸீர் அஹமட், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலிஸாஹிர் மொலானா, தேசிய கொள்கை பரப்புச் செயலாளர் யூ.எல்.எம்.என். முபீன், கல்குடாத்தொகுதி அமைப்பாளர் எச்.எம்.எம்.றியாழ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Shibly with Team

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg