Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அனுமதிப்பத்திரம் இன்றி ஆடுகளை ஏற்றிச் சென்ற இருவர் கைது!

In இலங்கை
Published: 11:02 GMT, Oct 15, 2017 |
0 Comments
1160
icon_com
This post was written by : Ravivarman
IMG_4054

அனுமதிப்பத்திரம் இன்றி ஆடுகளை ஏற்றிச் சென்ற இருவரை முச்சக்கர வண்டியொன்றுடன் கைது செய்துள்ளதாக முந்தல் பொலிஸார் தெரிவித்தனர்.

வீதிச் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸாரே இன்று (ஞாயிற்றுக்கிழமை) இவ்வாறு இரண்டு ஆடுகளைக் கடத்திச் சென்றவர்களைக்  கைது செய்துள்ளனர்.

குறித்த முச்சக்கர வண்டி முந்தல் பிரதேசத்திலிருந்து கொச்சிக்கடை பிரதேசத்திற்கு இவ்வாறு இரண்டு ஆடுகளை ஏற்றிக் கொண்டு சென்று கொண்டிருந்ததுடன், இந்த ஆடுகளை வளர்ப்பதற்காக கொண்டு செல்வதாக கைது செய்யப்பட்ட இருவரும் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.

எனினும் இந்த ஆடுகள் இறைச்சிக்காகவே இவ்வாறு அனுமதிப்பத்திரமின்றி கொண்டு செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

முந்தல் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் சமன் ஏக்கநாயக்காவின் தலைமையிலேயே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு மேலதிக விசாரணைகளும் இடம்பெற்று வருகின்றன.

IMG_4052

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg