Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இடைக்கால அறிக்கை குறித்து சமத்துவம், சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் நிலைப்பாடு!

In இலங்கை
Published: 12:36 GMT, Oct 15, 2017 |
0 Comments
1141
icon_com
This post was written by : Ravivarman
unnamed__2_

புதிதாக உருவாக்கப்படும் அரசியலமைப்பானது, கடந்த கால கசப்பான படிப்பினைகளின் அடிப்படையாக கொண்டு, இலங்கையின் பல்லினத்தன்மைக்கு உரியதாக அமையவேண்டும் என சமத்துவம், சமூக நீதிக்கான மக்கள்  அமைப்பு தெரிவித்துள்ளது.

இது குறித்து அவ்வமைப்பு இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது, “சிங்களப்பெரும்பான்மையினரின் மேலாதிக்க உளநிலையைப் பேணும் வகையில், மீண்டும் பல்லினத்தன்மைக்குச் சவாலான அம்சங்களே இடைக்கால அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இதனால் தமிழ், முஸ்லிம், மலையக மக்கள் மீளவும் அரசியல் உரிமையற்ற நிலைக்குள்ளாக்கப்படும் நிலையே காணப்படுகிறது. எனவே, இதனை சமத்துவம், சமூக நீதிக்கான மக்கள் அமைப்பு மாற்றியமைக்கக் கோருகின்றது.

வடக்குக் கிழக்கு இணைந்த பிராந்திய சபை அரசியலமைப்பு மூலம் உறுதி செய்யப்படல் வேண்டும். இலங்கைக்குள் காணப்படும் எண்ணிக்கையிலான சிறுபான்மை தேசிய இனங்களின் சிறப்புரிமைகள் மற்றும் பாதுகாப்பு என்பன உறுதி செய்யப்பட வேண்டும்.

அதிகாரப் பரவலாக்கம் தொடர்பான விடயங்கள் அரசியலமைப்பில் தெளிவான வியாக்கியானம் உடையவையாக அமைதல் வேண்டும். மயக்கமான கருத்துகள், தப்பான மொழிமாற்றத்திற்கான சந்தர்ப்பங்கள் கொண்டவையாக இவ்விடயங்கள் அமையக்கூடாது.

மாகாணசபையின் நிறைவேற்று அதிகாரம் மக்களால் தெரிவு செய்யப்பட்ட மாகாணசபையின் காலங்களில் மாகாணசபையின் முதலமைச்சருக்கு உரியதாக வரையறை செய்யப்பட வேண்டும்.

மாகாணசபை முதலமைச்சர் நிதியம், அவசரகால நிதியம், இடர் முகாமைத்துவ நிதியம், மாகாண அபிவிருத்தி நிதியம் என்பவற்றை மாகாண சபைகள் ஸ்பாபிப்பிதற்கும் செயற்படுத்துவதற்குமான அதிகாரம் அரசியலமைப்பின் மூலம் உறுதி செய்தல் வேண்டும்.

மாகாணசபைக்குப் பகிர்ந்தளிக்கப்பட்ட விடயங்களில் மத்திய அரசின் ஆலோசனை தவிர்ந்த நேரடித் தலையீடுகள் இடம்பெறாதிருப்பதை அரசியலமைப்புத் திருத்தம் உறுதியுரைக்க வேண்டும்.

மாகாணசபையின் ஆட்புலத்திற்கு உட்பட்ட மத்திய அரசின் விடயங்களை நடைமுறைப்படுத்துதலில் குறித்த மாகாண முதலமைச்சரின் ஆலோசனைகள் கருத்திற் கொள்ளப்பட வேண்டும்.

உள்ளூராட்சிச் சபைகளின் கையாள்கைக்கு ஒதுக்கப்பட்ட விடயங்களில் மத்திய அரசு மற்றும் மாகாண சபையின் நேரடித் தலையீடு தவிர்க்கப்படல் வேண்டும்.

மத்திய அரசுக்கும் மாகாணசபைக்கும் இடையேயும் மாகாணசபைக்கும் உள்ளூராட்சி அமைப்புகளுக்கு இடையேயும் ஏற்படும் பிணக்குகளைத் தீர்ப்பதற்கான அரசியல் அமைப்பு உயர் நீதிமன்றம், அதிகார பகிர்விற்கான ஆணைக்குழு என்பனவும் என்பனவும் ஏற்படுத்தப்படல் வேண்டும்.

இவை சுயாதீனத்துடனும் சட்ட வலுவுடனும் செயற்படுத்தப்படுவதற்குரிய நிறுவன அமைப்பை அரசியலமைப்புத் திருத்தம் மூலம் உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறோம்” எனக் குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg