Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

உருளைக்கிழங்கு ரொட்டி!

In
Published: 11:57 GMT, Oct 15, 2017 |
0 Comments
1727
icon_com
This post was written by : Vithushagan
201704281530123112_Missi-roti._L_styvpf

தேவையான பொருட்கள்

கோதுமை மா – 500 கிராம் 
உருளைக்கிழங்கு – 250 கிராம்
வெங்காயம்- 50 கிராம்
பச்சை மிளகாய்- 6
கறிவேப்பிலை- சிறிதளவு
எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

☆ உருளைக்கிழங்கை உப்பு சேர்த்து வேகவைத்து தோல் நீக்கி நன்றாக பிசைந்து கொள்ளவும்.

☆வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் என்பவற்றை சுத்தம் செய்து சிறிய அளவில் நறுக்கி வைக்கவும்.

☆ஒரு பாத்திரத்தில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், மசித்த உருளைக்கிழங்கை போட்டு, சிறிது சிறிதாக கோதுமை மாவு மற்றும் உப்பையும் சேர்த்து மிருதுவான மாவாக பிசையவும். (தண்ணீர் சேர்க்க வேண்டும்).

☆பிறகு மாவை உருண்டைகளாக்கி,  மெல்லிய வட்ட வடிவில் தட்டி வைக்கவும்.

☆ தோசைக்கல்லில் எண்ணெயை தடவி, சூடானதும் தட்டி வைத்த வட்டங்களை ஒவ்வொன்றாக போட்டு மறுபுறம் திருப்பி வெந்ததும் எடுக்கவும்.

¤எண்ணெய் விட்டு பொரித்தும் எடுக்கலாம், உருளைக்கிழங்கு ரொட்டி தயார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg