Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிரெக்சிற்: பேச்சுவார்த்தையின்றி விலக முடியாது – கிறிஸ் கிரேய்லிங்

In
Published: 07:31 GMT, Oct 16, 2017 |
0 Comments
1117
icon_com
This post was written by : Suganthini
uk

எந்தவித பேச்சுவார்த்தையுமின்றி ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகும் என்று எண்ணவில்லை  என, பிரித்தானிய போக்குவரத்து அமைச்சர் கிறிஸ் கிரேய்லிங் (Chris Grayling) தெரிவித்துள்ளார்.

ஊடகமொன்றுக்கு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) வழங்கிய நேர்காணலின்போதே, அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்தபோது, ‘பிரெக்சிற் விவகாரம் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகளுக்கும் பிரித்தானியப் பிரதமர் தெரேசா மே அரசாங்கத்துக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது, எதிர்கால வர்த்தக உறவு தொடர்பில் சற்றுப் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இருப்பினும், எந்தவித பேச்சுவார்த்தையுமின்றி ஐரோப்பிய ஒன்றியம் விலகும் என்று நான் எண்ணவில்லை’ என்றார்.

‘பிரெக்சிற் விவகாரத்தில் பிரித்தானியா வெற்றி அடையும் என்று நான் நம்புகின்றேன். ஆனால், இந்த விவகாரத்தில் எவ்வாறான நிலைப்பாட்டை பிரித்தானியா வைத்துக்கொள்ளும் என்று எனக்குத் தெரியவில்லை’ எனவும் அவர் கூறியுள்ளார்.

‘பிரெக்சிற் விவகாரம் தொடர்பான பேச்சுவார்த்தையின்போது, சுமூகமான நிலைப்பாட்டை நாம் எட்டுவோம் என்பதுடன், சிறந்த வர்த்தக ஒப்பந்தத்தை நாம் பெறுவோம் எனவும் எதிர்பார்த்துள்ளேன்’ எனவும் அவர் கூறியுள்ளார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg