Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சவுதிக்கு ஆயுதம் விற்பனை செய்வதை தடுக்க வேண்டும்- தொழிற்கட்சி வலியுறுத்தல்

In
Updated: 10:27 GMT, Oct 16, 2017 | Published: 10:26 GMT, Oct 16, 2017 |
0 Comments
1163
icon_com
This post was written by : Elakkiya
12cfbd35-ab22-4c45-974a-9d004b99bd9d

வறுமையில் வாடும் யேமனுக்கு எதிராக  இராணுவ ஆக்கிரமிப்பு தொடர்கின்ற நிலையில், சவுதி அரேபியாவுக்கு ஆயுதங்கள் விற்பனை செய்வதை பிரித்தானிய அரசாங்கம் தடைசெய்ய வேண்டும் என பிரித்தானிய தொழிற்கட்சி வலியுறுத்தியுள்ளது.

யேமனில் சவுதி தலைமையிலான கூட்டணி நடத்திய போரில் இதுவரை 12 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் உயிரிந்துள்ளனர். அதுமட்டுமின்றி மருத்துவமனைகள், பாடசாலைகள் மற்றும் தொழிற்சாலைகள் என உட்கட்டுமானங்கள் சேதமாகியுள்ளன.

அதுமட்டுமின்றி சவுதி தலைமையிலான போர் யேமன் முழுவதும் கொடிய கொலரா நோயையும் தோற்றுவித்துள்ளது. வறிய தேசத்தை பரவலான பஞ்சத்தின் விளிம்புக்கு அழைத்துச் சென்றுள்ளது. இந்நிலையில் பிரித்தானிய பிரதமர் தெரேசா மே அரசாங்கம் சவுதி அரேபியாவுக்கு ஆயுத ஏற்றுமதியை நிறுத்த வேண்டும் என்ற அழுத்தங்கள் அதிகரித்து வருகின்றது.

இந்நிலையில், ஆளும் கொன்சர்வேற்றில் அரசாங்கத்தை போலன்றி தற்காப்பு நோக்கங்களுக்காக ஆயுதங்களை பயன்படுத்தும் நாடுகளுக்கு மாத்திரமே தொழிற்கட்சி நிர்வாகம் ஆயுதங்களை வழங்கும் என்று அமைதிக்கான நிழல் அமைச்சர் ஃபபியன் ஹமில்டன் நேற்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், உள்நாட்டு அடக்குமுறை அல்லது வெளிநாட்டு போர்களுக்காக ஆயுதங்களை பயன்படுத்தும் எந்தவொரு அரசாங்கத்திற்கும் ஆயுதங்கள் விற்பனை செய்யக் கூடாது என்று சவுதி கூட்டணி நாடுகள் உட்பட மத்திய கிழக்கு நாடுகளை கருத்தில்கொண்டு தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமின்றி, ஐக்கிய அரபு இராஜ்ஜியம், பஹ்ரைன், குவைத் மற்றும் எகிப்து ஆகியவற்றிற்கு எதிராக ஆயுதங்களை முடக்கிவிடுவதற்கே தொழிற்கட்சித் தலைவர் ஜெரமி கோர்பின் முயற்சிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg