Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

முகப்பரு உடனடியாக மறைய என்ன வழி?

In
Updated: 11:10 GMT, Oct 16, 2017 | Published: 11:09 GMT, Oct 16, 2017 |
0 Comments
1431
icon_com
This post was written by : Kemasiya
25-1445752299-pimples2

முகத்தின் அழகை கெடுப்பதில் முகப்பரு தான் பெண்களின் எதிரி எனலாம்.சூழல் மாசு, உடலின் வயிற்றுக் கோளாறுகள், உணவுப்பழக்கத்தில் சீரின்மை, அடிக்கடி சோப், கிறீம், என்பவற்றை மாற்றி பாவித்தல் போன்ற, பல்வேறு காரணங்களினால் முகப்பரு போடுவது வழமை.

இவ்வாறு முகப்பரு வந்துவிட்டால், உடனடியாக என்ன தீர்வு என்பது பல பெண்களின் கேள்வி. நீங்களும் உடனடியாக முகப்பருவை போக்க விரும்புபவர் ஆயின், இதோ இந்த வழிமுறையை கடைப்பிடித்தால் போதும். உடனடியாக உங்கள் முகப்பரு மறைந்து விடும்.

1-மர மஞ்சல்
2-வேப்பம் குருத்து
3-தேசிப்பழம்
4-பச்சை பயறு தூள்

மர மஞ்சல் மற்றும் வேப்பம் குருத்தை நன்றாக அரைத்து முகத்தில் பரு உள்ள இடங்களில் தடவிக்கொள்ள வேண்டும். 15 நிமிடங்கள் கழித்து துடைது விட்டு, ஐஸ்கட்டி கொண்டு ஒத்தடம் கொடுக்க வேண்டும்.

பின்னர் பயற்றம் மாவை குளிர் நீரில் குழைத்து முகத்தில் தடவி, 15 நிமிடம் கழித்து துடைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

அதன் பின்பு,  ஐஸ் கட்டியினால் ஒத்தடம் கொடுத்து விட்டு,  சுடு நீரில் ஆவி பிடிக்க வேண்டும்.

தொடர்ந்து குளிர் நீரில் முகத்தை கழுவி, இரவில் வழமையாக பாவிக்கும்  கிறீம் பாவித்தல் வேண்டும்.

குறிப்பு – இதனை இரவு வேளையில் செய்வதே சிறப்பு. முகம் கருமையடையாமல் பாதுகாப்பாக இருக்கும்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg