Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பாகிஸ்தானின் வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு விஜயம்!

In இலங்கை
Published: 03:19 GMT, Oct 17, 2017 |
0 Comments
1174
icon_com
This post was written by : Ravivarman
pakistan-foreign-minister

பாகிஸ்தானின் வெளிவிவகார அமைச்சர் தெஹ்மினா ஜானுவா இன்று (செவ்வாய்க்கிழமை) இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

இலங்கை மற்றும் பாகிஸ்தானுக்கிடையில் இடம்பெறவுள்ள 5 ஆவது சுற்று பேச்சுவார்த்தைகளில் கலந்துக்கொள்வதற்காகவே இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டு இலங்கை வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விஜயத்தின் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன ஆகியோரைச் சந்தித்துக் கலந்துரையாடுவார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இருதரப்பு உறவுகள் மற்றும் ஒத்துழைப்புக்களை மேலும் வலுப்படுத்துவதற்கு பாகிஸ்தானின் வெளிவிவகார அமைச்சின் செயலாளரின் இவ்விஜயமானது பங்களிப்புச் செய்யும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளதாக பாகிஸ்தானின் வெளிவிவகார அமைச்சர் தெஹ்மினா ஜானுவா ஊடகங்களுக்குத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg