Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வட.மாகாணசபை உறுப்பினர்களுக்கு இந்தியாவில் பயிற்சி!

In இலங்கை
Updated: 04:45 GMT, Oct 17, 2017 | Published: 04:38 GMT, Oct 17, 2017 |
0 Comments
1271
icon_com
This post was written by : Ravivarman
indiya 05.

வட.மாகாணசபை உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகளுக்கான அறிவூட்டல் செயலமர்வு கடந்த வாரம் இந்திய தலைநகர் புதுடில்லியில் அமைந்துள்ள ஓபி ஜிந்தால் குளோபல் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.

இதில் வடமாகாணசபை அமைச்சா் அனந்தி சசிதரன் மற்றும் எதிா்க் கட்சித் தலைவா் எஸ்.தவராசா உட்பட வடக்கு மாகாண சபை உறுப்பினா்கள் பலரும் மற்றும் வட. மாகாண பிரதம செயலாளர் பத்திநாதன், ஆளுநரின் செயலர் இளங்கோவன் உட்பட மேலும் பல அரச அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

இலங்கையின் இனப்பிரச்சினை ஆரம்பமானது முதல் தற்போதுவரை இலங்கை அரசியலில் அவதானிப்புக்களைச் செய்துவரும் மிகவும் பிரபல்யம் வாய்ந்த விரிவுரையாளர்கள், புத்திஜீவிகள், அரசியல் ஆய்வாளர்கள் ஒருவாரமாக இந்த அறிவூட்டும் வேலைத்திட்டத்தில் கலந்து கொண்டனர்.

இனசமத்துவம், அதிகாரங்களைப் பகிர்ந்து கொள்ளுதல், சமூகங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தினை ஏற்படுத்திக் கொள்ளுதல், தேசிய பாதுகாப்பு என்பன குறித்து மேற்படி கலந்துரையாடலில் ஆராயப்பட்டன.

விசேடமாக இலங்கை இனப்பிரச்சினையில் இந்தியாவின் தலையீடுகள், தற்போதைய பிரச்சினையினை தீர்ப்பதற்கு வடமாகாணசபை ஆற்றவேண்டிய முக்கிய பணிகள் தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டது.

மூத்த பத்திரிகையாளர் எம்.கே.நாராயணசாமி, இலங்கைக்கான முன்னாள் தூதுவர் நிருபமா ராவ், கலாநிதி சி.ராஜ்குமார், கலாநிதி ஆர்.சுதர்சன், கலாநிதி எம்.சுதர்சன நாச்சியப்பன், கலாநிதி மோகன்குமார் உட்பட மேலும் பல விரிவுரையாளர்கள் கலந்து கொண்டனர்.

inin indiya 04 indiya 03 indiya 02

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg