Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிரதமரின் அலுவலகத்தில் தீ விபத்து! – டெல்லியில் பரபரப்பு – விசாரணை தீவிரம்

In இந்தியா
Updated: 05:26 GMT, Oct 17, 2017 | Published: 04:36 GMT, Oct 17, 2017 |
0 Comments
1203
icon_com
This post was written by : Puvanes
modi

டெல்லி – ரெய்சானா ஹில்ஸ் உள்ள பாரதப் பிரதமர் மோடியின் பிரதான அலுவலகத்தில் இன்று அதிகாலை திடீரென தீ விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது.

அதிகாலை சுமார் 3.30 மணியளவில் பிரதமர் அலுவலகத்தில் 2 மாடியில் உள்ள அறை ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டு, தீ வேகமாக பரவத் தொடங்கிய காரணத்தினால் அதிகாலை வேளையில் டெல்லி பதற்றமடைந்துள்ளது.

அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு 10 இற்கும் அதிகமான தீயணைப்பு வண்டிகள் வந்து 20 நிமிட தீவிர போராட்டத்திற்கு பின்னா் தீ முழுவதுமாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

குறித்த தீ விபத்தினால் எவருக்கும் காயம் ஏற்படவில்லை, எனவும் அதிக சேதம் ஏற்படவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளதோடு, தீ பரவியமைக்கான காரணம் மற்றும் முழுச் சேத விபரம் தொடர்பில் மேலதிக தகவல்கள் இதுவரை வெளிப்படுத்தப்படவில்லை.

தற்போது குறித்த தீ விபத்துக்கான காரணங்களை கண்டறியும் முயற்சியில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

இதேவேளை தீவிபத்து ஏற்பட்ட பகுதியிலேயே, இந்திய இராணுவத்துறை அலுவலகம் மற்றும் பிரதமரின் அலுவலகம், வெளியுறவுத்துறை அலுவலகம் போன்றன செயற்பட்டு வருகின்றன.

கடந்த வருடமும் இதே போன்றதொரு தீ விபத்து பிரதமர் அலுவலகத்தில் ஏற்பட்டிருந்தது என்பது சுட்டிக்காட்டப்படத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg