Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கதலோனியத் தலைவர்கள் இருவருக்கு சிறை

In
Published: 04:37 GMT, Oct 17, 2017 |
0 Comments
1178
icon_com
This post was written by : Suganthini
jail

ஆர்ப்பாட்டங்களுக்கு தலைமை தாங்கியமை தொடர்பான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்ட கதலோனியத் தலைவர்கள் இருவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த செப்டெம்பர் 20ஆம் திகதி, பார்சிலோனாவில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டங்களுக்கு இவர்கள் இருவரும் தலைமை தாங்கிய குற்றச்சாட்டில் இவர்கள் இருவர் மீதும் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

இது தொடர்பான வழக்கு விசாரணை, ஸ்பெய்ன் தேசிய நீதிமன்றத்தில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்றபோதே, இவர்களுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் இருவரும் 15 வருடகால சிறைத்தண்டனையை எதிர்நோக்கியுள்ளனர்.

கதலோனியாவில் சுதந்திரத்துக்கான வாக்கெடுப்பு, இம்மாதம் முதலாம் திகதி நடத்தப்பட்டது. இந்த வாக்கெடுப்பில் 2.3 மில்லியன் மக்கள் கலந்துகொண்ட நிலையில், 90 சதவீதமானோர் ஆதரவாக வாக்களித்தனர்.

இந்த வாக்கெடுப்பு சட்டவிரோதமானது என்று ஸ்பெய்ன் அரசாங்கம் கூறியிருந்த நிலையில், அங்கு பதற்றமான நிலைமை ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg