Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

போர்த்துக்கல், ஸ்பெய்னில் பாரிய காட்டுத்தீ: உயிரிழந்தோர் 35ஆக அதிகரிப்பு

In
Published: 05:04 GMT, Oct 17, 2017 |
0 Comments
1181
This post was written by : Suganthini
fire

போர்த்துக்கல் மற்றும் ஸ்பெய்னில் மிக வேகமாகப் பரவிவரும் காட்டுத்தீ காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன், சுமார் 50 பேர் எரிகாயங்களுக்கு உள்ளாகியுள்ளதுடன், இவர்களில் 15 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, பலர் காணாமல் போயுள்ளதாகவும் அவர்களைத் தேடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

போர்த்துக்கல்லிலும் ஸ்பெய்னிலும் நேற்றுமுன்தினம் (ஞாயிற்றுக்கிழமை) முதல் காட்டுத்தீ மிக வேகமாகப் பரவி வருவதுடன், அப்பகுதிகளில் ஒரே புகை மண்டலமாகவும் காணப்படுகின்றது. கடந்த இரண்டு நாட்களாக பரவி வரும் தீயில் சிக்கி 35 பேர் உயிரிழந்துள்ளனர்.

தீயை அணைப்பதற்காக தீயணைப்புப் படை வீரர்கள் சுமார் ஆயிரம் பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ள போதிலும், அவர்கள் கடுமையான சிரமத்தை எதிர்நோக்கியுள்ளனர்.

வரட்சியான காலநிலை மற்றும் அதிகூடிய வெப்பநிலையே இந்த விபத்துக்கு காரணமாகும் எனவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இந்நிலையில், போர்த்துக்கல்லில் அனர்த்தம் இடம்பெற்ற பகுதியில் அவசரகாலநிலையை அந்நாட்டு அரசாங்கம் பிறப்பித்துள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg