Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அம்மாவின் மரணமும் அதிரும் அ.தி.மு.கவும்! – ஆரம்பமானது புதிய அரசியல் சதுரங்கம்

In இந்தியா
Updated: 08:14 GMT, Oct 17, 2017 | Published: 05:14 GMT, Oct 17, 2017 |
0 Comments
1540
icon_com
This post was written by : Puvanes
jaya001

அ.தி.மு.கவின் இரட்டை இலைச் சின்னத்தினை முற்றாக முடக்கும் செயற்பாடுகளில் டி.டி.வி. தினகரன் தரப்பு தீவிரமாக ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

தமிழகத்தின் அம்மா முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்திற்கு பின்னர் சிதறிப்போன அ.தி.மு.க முத்தரப்பாக பிரிந்து மோதிக்கொண்டதால் பிரச்சினைகள் வெடித்து இரட்டை இலை தொடர்பில் சர்ச்சைகள் ஏற்பட்டது.

இந்த நிலையில், பழனிசாமி தரப்பும், பன்னீர் செல்வம் தரப்பும் மீண்டும் இணைந்து ஒருபக்கமும், தினகரன் தரப்பு ஒருபக்கமும் இரட்டை இலைச் சின்னம் தனக்கே வேண்டும் என்று கோரிக்கைகள் முன்வைத்து போராடி வருகின்றன.

இருதரப்பும் இது குறித்து தேர்தல் ஆணையகத்தில் கோரிக்கை முன்வைத்ததன் பின்னர், இது தொடர்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது அதன்படி நேற்றைய தினம் உயர் நீதிமன்றம் எதிர்வரும் நவம்பர் 10 ஆம் திகதி வரை வழக்கை ஒத்திவைத்துள்ளது.

இந்த நிலையில் தினகரன் தரப்பிற்கு இரட்டை இலைச் சின்னம் மீளக் கிடைக்கும் சாத்தியக் கூறு இல்லாத நிலை ஏற்பட அதனை முற்றாக முடக்கும் செயற்பாடுகளில் அவர்கள் ஈடுபட்டு வருவதாக குறிப்பிடப்படுகின்றது.

நேற்றைய தினம் தினகரன் தரப்பில் வாதிட்ட சட்டத்தரணி இரட்டை இலைச் சின்னத்தினை முற்றாக முடக்கவேண்டும் என வாதிட்ட விடயம் அ.தி.மு.க தரப்பிற்கு பாரிய அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

அதேபோன்று, எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்து ஜெயலலிதா வரை கட்டிக்காத்து வந்த கட்சியும், இரட்டை இலைச்சின்னத்திற்கும் தற்போது ஏற்பட்டுள்ள நிலையினாலும், சின்னத்தை முடக்கும் செயற்பாடுகளினாலும் தொண்டர்கள் வேதனையடைந்துள்ளதாக அ.தி.மு.க தரப்பு கூறுகின்றது.

தினகரன் தரப்பு தனக்கு இரட்டை இலைச் சின்னம் கிடைக்காவிடின் யாருக்குமே கிடைக்கக் கூடாது என்ற சதுரங்கத்தை ஆரப்பித்துள்ளதாகவும், அதற்கு காரணம் தான் அ.தி.மு.கவில் இருந்து முற்றாக ஒதுக்கப்பட்டால் தனித்து புதுக்கட்சி ஆரம்பிக்கும் திட்டமே தற்போது தினகரனுக்கு உள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இந்த நிலையில் இரட்டைச் இலை முடக்கப்படுமா? யார் கைக்கு செல்லும்? தினகரன் புதுக்கட்சி ஆரப்பிப்பாரா? என்ற பல்வேறு கேள்விகளுடன் துவண்டுள்ளது அ.தி.மு.க.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg