Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மன்னாரில் பிள்ளையார் சிலைகள் உடைப்பு!

In இலங்கை
Published: 05:23 GMT, Oct 17, 2017 |
0 Comments
1314
icon_com
This post was written by : Ravivarman

மன்னார்-யாழ் பிரதான வீதியில் அமைந்திருந்த பிள்ளையார் சிலை இனந்தெரியாதவர்களால் உடைத்து சேதப்படுத்தப்பட்டுள்ளது.

தள்ளாடி இராணுவ முகாமிற்கு அருகில் உள்ள விமான ஓடு பாதைக்கு முன் வீதி ஓரத்தில் சிறிய கோவில் போன்று அமைக்கப்பட்டு அதனுள் வைக்கப்பட்டிருந்த பிள்ளையார் சிலையே நேற்று (திங்கட்கிழமை) இரவு உடைத்துச் சேதப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த வீதியூடாக இன்று காலை பயணித்த மக்கள், சிலை உடைக்கப்பட்ட நிலையில் காணப்பட்டதை கண்டு, மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

குறித்த சிலை ஏற்கனவே இரண்டு தடவைகள் உடைக்கப்பட்டு புதுப்பித்து வைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மூன்றாவது தடவையாக உடைக்கப்பட்டுள்ளமை இந்து மக்கள் மத்தியில் கடும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதேவேளை நாயாறு மற்றும் செம்மண் தீவுப் பகுதிகளில் உள்ள பிள்ளையார் சிலைகளும் நேற்றிரவு உடைக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.

அண்மைக் காலமாக மன்னார் மாவட்டத்தில் மதச்சிலைகள் இனந்தெரியாத நபர்களினால் உடைக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டு வருகின்றன.

இது குறித்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்ற போதும், சிலைகள் உடைப்பு தொடர்பில் இது வரை எவரும் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

DSC_0036 DSC_0050

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg