Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இந்திய துடுப்பாட்ட வீரர்களுக்கு நெருக்கடி கொடுப்பேன்: மிட்செல் சான்ட்னெர்!

In கிாிக்கட்
Updated: 08:57 GMT, Oct 17, 2017 | Published: 08:57 GMT, Oct 17, 2017 |
0 Comments
1252
This post was written by : Ravivarman

‘எந்த ஓட்டங்களையும் பெற விடாமல் பந்து வீசி இந்திய துடுப்பாட்ட வீரர்களுக்கு நெருக்கடி அளிக்க முயற்சிப்பேன்’ என்று நியூசிலாந்து அணியின் சுழற்பந்து வீச்சாளர் மிட்செல் சான்ட்னெர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மும்பையில் நேற்று (திங்கட்கிழமை) அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இந்திய அணிக்கு எதிராக பந்து வீசுவது என்பது கடினமான விடயமாகும். சுழற்பந்து வீச்சை எதிர்கொண்டு ஆடுவதில் இந்திய வீரர்கள் திறமையானவர்கள்.

சுழற்பந்து வீச்சை விளையாடியே அவர்கள் வளர்ந்தவர்கள். பந்தை வேகமாக வீசி துடுப்பாட்ட வீரர்களை தவறு இழைக்க வைக்க முயற்சிப்பேன்.

துடுப்பாட்ட வீரர்களுக்கு நெருக்கடி கொடுத்தால் சில விக்கெட்டுகளை பெற முடியும் என்று நம்புகிறேன். அந்த திட்டத்தை செயல்படுத்த நான் முயற்சி மேற்கொள்வேன்.

விராட்கோலியை கட்டுப்படுத்துவது என்பது எளிதான காரியம் அல்ல. அவர் மிகச்சிறந்த வீரர். இந்திய அணியில் நிறைய சிறந்த வீரர்கள் உள்ளனர்” என மிட்செல் சான்ட்னெர் மேலும் தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg