Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மஸ்கெலியாவில் முச்சக்கரவண்டிகள் மோதி விபத்து: ஆறுபேர் படுகாயம்

In இலங்கை
Published: 09:33 GMT, Oct 17, 2017 |
0 Comments
1139
icon_com
This post was written by : Elakkiya

மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மஸ்கெலியா பிரவுண்லோ பகுதியில் முச்சக்கரவண்டிகள் இரண்டு ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் ஆறு பேர் படுகாயமடைந்துள்ளனர்.

நேற்று (திங்கட்கிழமை) இரவு 8 மணியளவில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.

மஸ்கெலியா பகுதியிலிருந்து பிரவுண்லோ நோக்கிச் சென்ற முச்சக்கரவண்டி ஒன்றும் மவுஸ்ஸாக்கலையிலிருந்து மஸ்கெலியா நோக்கி பயணித்த மற்றுமொரு முச்சக்கரவண்டியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. அதிக வேகம் காரணமாகவே இந்த விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

விபத்தில் படுகாயமடைந்த ஆறுபேரும் மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விபத்துடன் தொடர்புடைய இரண்டு முச்சக்கரவண்டிகளும் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மஸ்கெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

DSC02754
Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg