Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வடக்கு, கிழக்கு மக்கள் கதறியழும் நிலை இனியும் தொடரக் கூடாது: மத்திய வங்கி அதிகாரி

In இலங்கை
Published: 09:53 GMT, Oct 17, 2017 |
0 Comments
1289
icon_com
This post was written by : Elakkiya

நுண்கடன் சுமையிலிருந்து காப்பாற்றுங்கள் என வடக்கு கிழக்கு வறிய மக்கள் கதறியழும் நிலை இனியும் தொடரக் கூடாது என இலங்கை மத்திய வங்கி வறுமை ஒழிப்புப் பிரிவின் குழுத் தலைவர் ஆர். ஸ்ரீபத்மநாதன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு கிறிஸ்தவ வாலிபர் சங்கக் கட்டடத்தில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற சிறிய நடுத்தர தொழில் முயற்சியாளர்களுக்கான தொழில் வழிகாட்டல் தொடர்பான விழிப்புணர்வுக் கலந்துரையாடலில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்படி குறிப்பிட்டுள்ளார்.

அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், “சமீபத்தில் மத்திய வங்கி ஆளுநர் வடபகுதிக்குச் சென்றபோது அங்கு நுண் கடன் சுமையால் பாதிக்கப்பட்ட வறிய குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் நுண்கடன் சுமையிலிருந்து தம்மை காப்பாற்றி வாழ்வளியுங்கள் என மன்றாட்டமாகக் கேட்டு கதறியழுதனர். இது பரிதாபகரமான ஒரு நிலை என்பதுடன் சீர்திருத்தம் செய்யப்பட வேண்டிய நிலைமை.

வடக்கு கிழக்கு மாகாணங்களிலேதான் இத்தகைய வறுமை, நுண்கடன் தொல்லை, பாலியல் துஷ்பிரயோகம், போலி நாணயத் தாள்களின் புழக்கம் என பல உண்டு. இத்தகைய பிரச்சினைகளால் பெரிதும் பாதிக்கப்படுபவர்கள் பெண்களாகவே உள்ளனர்.

நாட்டிலுள்ள 25 மாவட்டங்களில் மிகக் கொடிய வறுமையான மாவட்டங்களில் ‪முல்லைத்தீவு, மன்னார், மட்டக்களப்பு, கிளிநொச்சி ஆகிய மாவட்டங்கள் முதல் நான்கு இடங்களைப் பெற்றுள்ளது.

கடன்கள் மீளச் செலுத்தவில்லை என்ற காரணத்தினால் பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகியிருக்கின்றார்கள் என்ற தகவல் மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து கிடைக்கப்பபெற்றது. அதன்பின்னர் எந்தவொரு வங்கியாளரும் பிற்பகல் 4 மணிக்குப் பின்னர் வீடுகளுக்குச் சென்று கடன் அறவீடுகளில் ஈடுபடக் கூடாது என மத்திய வங்கி அறிவித்தல் வெளியிட்டது.

இவ்வாறு எத்தகைய  பாதிப்புக்கள் இடம்பெற்றாலும் அதற்கு முழுமுதற் காரணமாக நாம்தான் இருக்கின்றோம். எனவே, குறிப்பாக வறிய மக்கள் அழிவுகளைத் தவிர்த்து தமது அபிவிருத்தி தொடர்பாக விழிப்படைய வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

தெரிவு செய்யப்பட்ட தன்னார்வ அமைப்புக்களிக் சமூக மட்ட பிரதிநிதிகளுக்கு நுண்கடன் நிதி வழங்கலின் போது ஏற்படும் பிரச்சினைகள், நிதிசார் முகாமைத்துவம் தொடர்பிலும் மேற்படி விழிப்புணர்வு கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

DSC08416DSC08408

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg