Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஒஃபெலியா புயல் தாக்கம்: 4000 வீடுகளில் மின்விநியோகம் தடை

In
Published: 09:48 GMT, Oct 17, 2017 |
0 Comments
1145
icon_com
This post was written by : Suganthini
Ophelia

ஒஃபெலியா புயல் தாக்குதலை அடுத்து, வேல்ஸில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் மின்விநியோகம் தடைப்பட்டுள்ளதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

அத்திலாந்திக் சமுத்திரத்தில் நேற்று (திங்கட்கிழமை) உருவெடுத்துள்ள ஒஃபெலியா புயல், மணிக்கு 90 கிலோமீற்றர் வேகத்தில் வீசியுள்ளது.

இதனை அடுத்து, வேல்ஸில் மரங்கள் வீதியோரங்களில் முறிந்து விழுந்துள்ளதால் பெரும்பாலான வீதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. அத்துடன், படகுச் சேவைகளும் ரயில் சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, ஐந்து படகுகள் கடலில் மூழ்கியுள்ளதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

மேலும், மூன்று கரையோரப் பிரதேசங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg