Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

எதிரிகளை வீழ்த்த கம்யூனிஸ்ட் இயக்கங்கள் ஒன்றிணைய வேண்டும்: தா.பாண்டியன்

In இந்தியா
Updated: 10:12 GMT, Oct 17, 2017 | Published: 10:12 GMT, Oct 17, 2017 |
0 Comments
1167
This post was written by : Ravivarman

பொது எதிரிகளை வீழ்த்த கம்யூனிஸ்ட் இயக்கங்கள் ஒரே கட்சியாக இணைய வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னையில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து இவர் மேலும் தெரிவிக்கையில்,

“பொது எதிரிகளை வீழ்த்த அனைத்து கம்யூனிஸ்ட் இயக்கங்களும் ஒரே கட்சியாக இணைய வேண்டும். மதவாதக் கட்சியான பா.ஜ.க. ஆட்சி அதிகாரத்தில் இருப்பதால் நாட்டின் பன்முகத் தன்மைக்கு பெரும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

ஒரே மொழி, ஒரே மதம், ஒரே நாடு, ஒரே கலாச்சாரம் என்பதை நோக்கி பா.ஜ.க. சென்று கொண்டிருக்கிறது. இந்தச் சூழலில் பா.ஜ.க. உட்பட கம்யூனிஸ்ட்களின் பொது எதிரிகளை வீழ்த்த, பல்வேறு கட்சிகள், இயக்கங்களாகப் பிரிந்துள்ள கம்யூனிஸ்ட் இயக்கங்கள் அனைத்தும் ஒரே கட்சியாக இணைய வேண்டும்” என தா.பாண்டியன் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg