Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

குஜராத்தில் விவசாயிகளுக்கு வட்டி இல்லாத கடன்: முதலமைச்சர் அறிவிப்பு!

In இந்தியா
Updated: 10:27 GMT, Oct 17, 2017 | Published: 10:27 GMT, Oct 17, 2017 |
0 Comments
1231
This post was written by : Ravivarman

குஜராத் மாநிலம் முழுவதும் 25 லட்சம் விவசாயிகள் எந்தவித வட்டியும் இல்லாமல் கடன் பெற்றுக்கொள்ளலாம் என குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானி தெரிவித்தார்.

குஜராத் மாநிலத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற பா.ஜ.க.வின் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“விவசாயிகளுக்கு கடன்கள் வழங்க பா.ஜ.க. முடிவு செய்துள்ளது. எந்தவித வட்டியும் இல்லாமல் இந்தக் கடனை விவசாயிகள் பெறமுடியும்.

இந்தப் புதிய திட்டத்தின் கீழ் ஒவ்வொரு விவசாயியும் தலா ரூ.3 லட்சம் வரை அதிகபட்ச கடன் தொகை பெற முடியுமென்பதுடன், இதற்கான வட்டி எதையும் செலுத்த வேண்டியதில்லை. மாநில அரசாங்கம் இதற்கான கொடுப்பனவுகளைச் செலுத்தும்.

ஒவ்வொரு விவசாயிக்கும் 7 சதவீத வட்டித் தொகையை மத்திய அரசும், மாநில அரசும் சேர்ந்து வழங்கும். இதனால் குஜராத் மாநில அரசுக்கு ஆண்டு ஒன்றுக்கு ரு.700 கோடி கூடுதல் செலவு ஏற்படும்.

இந்த திட்டம் காரணமாக மாநிலம் முழுவதும் 25 லட்சம் விவசாயிகள் பயன் பெறுவார்கள்” என முதலமைச்சர் விஜய் ரூபானி மேலும் தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg