Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மைதானத்தில் மாயாஜாலம்! – ஒரே போட்டியில் 40 சிக்சர்கள் அடித்து சாதனை படைத்த வீரர்

In கிாிக்கட்
Updated: 10:34 GMT, Oct 17, 2017 | Published: 10:30 GMT, Oct 17, 2017 |
0 Comments
6826
This post was written by : Puvanes
Josh Dunstan001

ஒரே போட்டியில் 40 சிக்ஸர்கள் அடங்களாக 307 ஓட்டங்களை குவித்து அமெரிக்க வீரர் ஜோஷ் டன்ஸ்டன் சாதனைப்படைத்துள்ளார்.

நேற்றைய தினம் அமெரிக்கா போர்ட் ஆகஸ்டா மைதானத்தின் நடைபெற்ற களகங்களுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி ஒன்றில் வெஸ்ட் ஆகஸ்டா எதிர் சென்ட்ரல் ஸ்டிர்லிங் ஆகிய அணிகள் மோதிக்கொண்டன.

முதலில் துடுப்பெடுத்தாடிய வெஸ்ட் ஆகஸ்டா அணியின் ஓட்ட எண்ணிக்கை 10 ஆக இருந்தபோது முதல்விக்கெட்டை இழந்தது. அதனைத் தொடர்ந்து களம் இறங்கிய ஜோஷ் டன்ஸ்டன் சிக்ஸர் மாயாஞாலம் ஒன்றினையே காட்டியுள்ளார்.

40 சிக்ஸர்களை விளாசித்தள்ளிய அவர் மொத்தமாக 307 ஓட்டங்களைப் குவித்தார். இதில் குறிப்பிடத்தக்க விடயம் யாதெனின் வெஸ்ட் ஆகஸ்டா மொத்தமாக பெற்றுக் கொண்ட ஓட்டங்கள் 354 மட்டுமே ஆகும்.

35 பந்து வீச்சுக்களை மட்டுமே கொண்ட குறித்த போட்டியில் டன்ஸ்டன், மொத்த அணியின் ஓட்ட எண்ணிக்கையில் 86.72 சதவீதத்தை தனி ஒருவராக குவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg