Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வவுனியா வாள்வெட்டு சம்பவம்: சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு

In இலங்கை
Updated: 10:43 GMT, Oct 17, 2017 | Published: 10:42 GMT, Oct 17, 2017 |
0 Comments
1112
icon_com
This post was written by : Elakkiya
court

வவுனியா, நொச்சிமோட்டை பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடையதாக கைது செய்யப்பட்ட 20 சந்தேக நபர்களையும் எதிர்வரும் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு வவுனியா மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த இருபது பேரும் நேற்று (திங்கட்கிழமை) நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் மேற்படி விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த 13 ஆம் திகதி வவுனியா-நொச்சிமோட்டை பகுதியில் இடம்பெற்ற இரு கிராமங்களுக்கு இடையிலான முரண்பாடு மோதலாக மாறி வாள்வெட்டில் நிறைவடைந்தது.

இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த இருவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை 20 பேர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg