Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

போலியான லொத்தர் சீட்டுக்களுடன் ஒருவர் கைது!

In இலங்கை
Updated: 11:23 GMT, Oct 17, 2017 | Published: 11:00 GMT, Oct 17, 2017 |
0 Comments
1271
icon_com
This post was written by : Vithushagan
22561232_1574470229287636_1730396430_o

போலியான லொத்தர் சீட்டுகளை  வைத்திருந்த இளைஞர் ஒருவரை உடப்புஸ்ஸல்லாவ பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலொன்றிற்கமைய, நேற்று (திங்கட்கிழமை) இரவு குறித்த இளைஞனை சோதனைக்கு உட்படுத்திய போதே அவரிடமிருந்து போலியான லொத்தர் சீட்டுகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். இதன்போது, குறித்த இளைஞரிடமிருந்து 3629 லொத்தர் சீட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளது.

குறித்த லொத்தர் சீட்டுகள் ‘அபிவிருத்தி லொத்தர் சபையின்’ சீட்டுகளை போன்று போலியாக அச்சிடப்பட்டிருந்ததோடு, ஒரே தொடரிலக்கத்தில் நூற்றுக்கணக்கான லொத்தர் சீட்டுகள் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.

குறித்த போலி லொத்தர் சீட்டுகளில் 20,100,1000 போன்ற பரிசு தொகைகளையுடைய சில சீட்டுகளும் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கண்டி பகுதியை சேர்ந்த 29 வயதுடைய இளைஞர் ஒருவரே இதன்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த போலி லொத்தர் சீட்டு தொடர்பிலான விசாரணைகளை உடப்புஸ்ஸல்லாவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தம்மிக்க விஜேசிங்ஹ தலைமையிலான குழுவினர் முன்னெடுத்து வருகின்றனர்.

22561138_1574470159287643_1791874802_o

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg