Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தீபாவளிக்கு வாழ்த்து தெரிவித்து சர்ச்சையில் சிக்கிக் கொண்ட கனேடிய பிரதமர்!

In கனடா
Updated: 11:04 GMT, Oct 17, 2017 | Published: 11:04 GMT, Oct 17, 2017 |
0 Comments
4971
This post was written by : Puvanes

தீபாவளித் தினத்தை முன்னிட்டு டுவிட்டர் மூலமாக தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொண்ட கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்துக்களின் பண்டிகையான தீபாவளி தினத்தை முன்னிட்டு ட்ரூடோ தனது உத்தியோக பூர்வ டுவிட்டர் பக்கத்தில் “தீபாவளி முபாரக்… ஒட்டாவில் நாங்கள் இரவு கொண்டாடவுள்ளோம், தீபாவளி நல்வாழ்த்துக்கள்” என பதிவேற்றியுள்ளார்.

அதனைத் தொடர்ந்து, முபாரக் எனப்படும் வார்த்தை ஓர் அரபுச் சொல் எனவும் தீபாவளி வாழ்த்துக்கு அதனை பயன்படுத்தியது தவறு எனவும் வாதப்பிரதிவாதங்கள் எழுந்துள்ளன.

எந்தவொரு பண்டிகைக்கும் ட்ரூடோ தனது வாழ்த்துக்களைத் தொடர்ந்தும் தெரிவித்து வருவதனை வாடிக்கையாக கொண்டுள்ளார் என்பது சுட்டிக்காட்டப்படத்தக்கது.

இந்தநிலையில் ஒரு தரப்பினர் அந்தச் சொல் தவறு என வாதிட்டு வரும் அதேசமயம், பலரும் ட்ரூடோவிடம் முபாரக் என்ற சொல்லை மாற்றுமாறு கோரிக்கை விடுத்துள்ளதோடு, பலர் அவருக்கு நன்றி தெரிவித்து பதில் வாழ்த்துக்களையும் தெரிவித்தள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg