Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிரித்தானிய வானில் ஏற்பட்ட விசித்திர மாற்றம்

In
Published: 11:03 GMT, Oct 17, 2017 |
0 Comments
1395
icon_com
This post was written by : Suganthini
red

ஒஃபெலியா புயல் தாக்கியுள்ளதைத் தொடர்ந்து, பிரித்தானியாவில் வழமைக்கு மாறாக வானம் மஞ்சள் நிறமாகக் காணப்படுவதுடன், சூரிய ஒளிக்கீற்றுக்களும் செம்மஞ்சள் நிறமாகக் காணப்படுவதாக பிரித்தானிய வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்திலாந்திக் சமுத்திரத்தில் உருவெடுத்துள்ள ஒஃபெலியா புயல், மணிக்கு 90 கிலோமீற்றர் வேகத்தில் நேற்று (திங்கட்கிழமை) வீசியுள்ளது. இதனை அடுத்து, லண்டன் நகரிலும் தெற்கு மற்றும் கிழக்கு இங்கிலாந்திலும் இந்த மாற்றத்தை அவதானிக்கக்கூடியதாக இருந்தது. அத்துடன், இப்பகுதியில் மிதமான காற்று வீசியதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் கூறியுள்ளது.

போர்த்துக்கல் மற்றும் ஸ்பெய்னில் மிகத் தீவிரமாகப் பரவிவரும் காட்டுத்தீயினால் ஏற்பட்டுள்ள சாம்பல் துகல்களும்; சஹாரா பாலைவனத்திலிருந்து கிளம்பியுள்ள தூசிகளும் காற்றுடன் கலந்துசென்று மாசுபடுத்தியிருக்கலாம் எனவும் இதன் காரணமாக இந்த மாற்றம் ஏற்பட்டிருக்கலாம் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும், ஒஃபெலியா புயல் வீசியதைத் தொடர்ந்து, அயர்லாந்தில் 3 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg