Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பயன்தரு மரங்கள் அழிக்கப்பட்டு உருவாக்கப்படும் விளையாட்டு மைதானம்!

In இலங்கை
Published: 12:37 GMT, Oct 17, 2017 |
0 Comments
1128
icon_com
This post was written by : Vithushagan
22538174_1474328259310155_121577249_n

கிளிநொச்சி உதயநகா் மேற்கு கிராமத்தில் பெறுமதிமிக்க பயன்தரு மரங்கள் வெட்டப்பட்டு தனியாா் காணியில் மைதானம் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொது மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

ஜந்து ஏக்கர் பரப்பளவு கொண்ட காணியின் உரிமையாளர் 2009 ஆண்டுக்கு பின்னர் நாட்டில் இல்லாமையினால் காணி பராமரிப்பு இன்றி காணப்பட்டுள்ளது. குறித்த காணியில் தென்னைகள், உள்ளிட்ட பல பெறுமதிமிக்க பயன்தரு மரங்கள் காணப்பட்டுள்ளன.

இந்த நிலைணில் குறித்த காணியை பிரதேச விளையாட்டுக் கழகத்திற்கு அதிகாரிகள் மற்றும் அரசியல் தரப்புக்கள் இணைந்து வழங்கியதாக தெரிவித்து குறித்த காணியின் மூன்று ஏக்கர் நிலத்தில் உள்ள 40 ற்கும்  மேற்பட்ட பயன்தரு தென்னைகள், தேக்கு, வேம்பு உள்ளிட்ட மரங்கள் கனரக வாகனங்கள் மூலம் அழிக்கப்பட்டுள்ளது என பொது மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

தற்போது சந்தையில் தேங்காய் அதிக விலையில் விற்கப்பட்டு வரும் நிலையில் வளர்ந்த பயன்தரு தென்னைகள் 40 மேல் வெட்டப்பட்டமை மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

22538174_1474328259310155_121577249_n 22551848_1474328362643478_6060324_n

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg