Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

துருக்கி – அமெரிக்க விசா பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கை

In உலகம்
Published: 12:29 GMT, Oct 17, 2017 |
0 Comments
1095
icon_com
This post was written by : Suganthini
turkey

துருக்கிக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ள  விசா சேவை பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக, ஐரோப்பிய ஒன்றியத்துக்கான அமெரிக்காவின் உதவிச் செயலாளர் தலைமையிலான குழுவினர், துருக்கிக்கு நேற்று (திங்கட்கிழமை) புறப்பட்டுச் சென்றுள்ளனர்.

இது தொடர்பான கலந்துரையாடல் நடைபெற்று வருவதாக துருக்கிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

துருக்கியில் ஆட்சிக்கவிழ்ப்பு மேற்கொள்ள முற்பட்டதாகக் கூறப்படும் மதகுரு ஒருவருடன் தொடர்பு வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில், துருக்கியிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தில் பணியாற்றிவந்த அதிகாரி ஒருவர் அண்மையில் கைதுசெய்யப்பட்டிருந்தார்.

இதனைத் தொடர்ந்து, இந்த இரு நாடுகளுக்கும் இடையில் பதற்றமான நிலைமை ஏற்பட்டுள்ளதுடன், இந்த இரு நாடுகளும் தங்களது விசா சேவைகளை இடைநிறுத்தி வைப்பதற்கும் தீர்மானம் எடுத்திருந்தன. இந்நிலையில், குடியேற்ற விசா அல்லாத அனைத்து வீஸா சேவைகளும் இடைநிறுத்தி வைக்கப்படுவதாக இந்த இரு நாடுகளும் அறிவித்திருந்தன.

இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில் ஐரோப்பிய ஒன்றியத்துக்கான அமெரிக்காவின் உதவிச் செயலாளர் தலைமையிலான குழுவினர், துருக்கிய அதிகாரிகளுடன் சுமூகமான கலந்துரையாடலில் ஈடுபட்டு வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg