Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஐ.எஸ்ஸிடமிருந்து மீட்கப்பட்ட ரக்காவும்- 3 வருட குருரப் பாதையும்

In உலகம்
Updated: 14:36 GMT, Oct 17, 2017 | Published: 14:35 GMT, Oct 17, 2017 |
0 Comments
1458
icon_com
This post was written by : Sivaguru Siva
3500

ஐ.எஸ் எனப்படும் இஸ்லாமிய அரசு 2014 இல் தனது கலிபாத் கருத்தியலை உலகுக்கு அறிவிப்பதற்கு பெரும் பின்புலமாக இருந்தது ரக்கா நகரின் கதை இன்று மாறிவிட்டது.

ரக்கா நகர் இப்போது அமெரிக்க ஆதரவு படைத்தரப்பின் கைகளில் அந்தநகர் மீதான தமது வெற்றியை அறிவிக்க தற்போது அந்தத்தரப்பு தயாராகின்றது.

_98347867_mediaitem98347865

2014 இல், ஐ.எஸ் ஆயுததாரிகளால் கைப்பற்றப்பட்ட பெரிய நகரங்களில் முதன்மையாக இருந்தது ரக்கா.அதன்பின்னர் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு அது ஐ.எஸ்ஸின் இறுக்கமான கட்டுப்பாட்டில்தான் இருந்தது.

19-Raqqa-AP

 

ஐ.எஸ்ஸிடம் ரக்கா வீழ்ந்த பின்னர் அதன் குருரமான ஒரு அடையாளமாக ஐ.எஸ் ஆயுததாரிகள் வழங்கிய மரணதண்டனைகள் அமைந்தன.

பணயக்கைதிகள் அல்லது தமது ராஜ்யத்தை எதிர்பவர்கள் என எல்லோருடைய சிரசுகளை குருரமாக கொய்வது.

அல்லது எதிர்ப்பாளர்களை சிலுவையில் அறைந்த கொல்வது. மக்களை கடுமையாக சித்திரவதை செய்வது போன்ற அவலங்கள் இங்கு தினசரி இடம்பெற்றன.

*COMPOSITE* **MUZZED**

இதனையும் விட ஐ.எஸ் தலைவர் அபு பக்கர் அல் பக்தாதியின்  அழைப்பின் அடிப்படையில்  உலகின் பல பகுதிகளில் இருந்தும் ஜிகாதிகள் இங்கு குவிந்தனர்.

2017-03-08T114959Z_124212413_RC1D3B82F240_RTRMADP_3_MIDEAST-CRISIS-IRAQ-BAGHDADI-960x576-1499154258

அவ்வாறாக ஜிகாதிகளின் பலம் பொருந்திய ஒரு நகரமாக உருவான இந்த ரக்கா மறுபுறத்தே அமெரிக்கா ரஸ்யா உட்பட்ட நாடுகளின் இலக்காகவும் அடிக்கடி மாறியது.தினசரி அதன் மீது வான்வழித்தாக்குதல்கள் நடத்தபட்டன.

9d6a77ac18a24b0bb9dcd2bc1e19c5a1_18

ஆயினும் ஐ.எஸ்ஸின் இந்த கலிபாத் மேற்குலகுக்கு சவாலாகவே நின்றது.

இந்த நிலையில்தான் கடந்த ஆண்டு நவம்பரில் ரக்கா நகரை கைப்பற்றும் நோக்குடன்  அதனை நோக்கிய ஒரு தரைவழி ராணுவ நகர்வை அமெரிக்க தலைமையிலான கூட்டணி ஆரம்பித்தது.

சுமார் பதினையாயிரம் பேரடங்கிய எஸ்.டி.எஃப்  எனப்படும் சிரிய ஜனநாயக படையினரும் சிறப்பு படையினரும் அமெரிக்க வான்வழி தாக்குதல் உதவியுடன் கடந்த 11 மாதங்களாக  ரக்கா நோக்கிய ராணுவ நகர்வை மேற்கொண்டனர்.

இடையில் எத்தனையோ சமர்க்களங்கள். ஆயினும் மெல்ல மெல்ல முன்னேறிய அந்த அணி கடந்த யூன் மாதம் ரக்காவின் புறநகர்ப் பகுதியை சுற்றிவளைத்தது.

maxresdefault

இதன் பின்னர் படிப்படியாக ஐ.எஸ்ஸின் பாதுகாப்பு நிலைகளை தகர்த்து முன்னேறிய அந்த அணி கடந்தவார இறுதியில் ரக்காவின் மையப்பகுதியை கைப்பற்றியது.

இறுதியாக எஞ்சியிருந்த ஐ.எஸ் ஆயுததாரிகள் மற்றும் அவர்களின் குடும்பங்கள் பழங்குடித் தலைவர்களின் சமாதானப் பேச்சுக்களின் மூலம் அங்கிருந்து அகற்றப்பட்டனர். மோதலில் ஈடுபட்ட மிகுதிப்பேர் கொல்லப்பட்டனர்.

நேற்றுத்தான்  பல மாதங்களுக்குபின்னர் முதன்முறையாக, எந்தவொரு வான்வழி தாக்குதல், மற்றும் துப்பாக்கிச்சூடு இல்லாத நாளாக ரக்காவுக்கு அமைந்தது.

684x384_348844

மறுபுறத்தே கடந்த இரண்டு ஆண்டுகளாக சிரியா மற்றும் ஈராக்கில் தொடர்ந்தும் தமது பிடியை இழந்த ஐ.எஸ் க்கு, ரக்காவின் வீழ்ச்சியும் ஒரு கடும் பின்னடைவாகவே மாறியுள்ளது.

ஆம் தற்போது ரக்காவில் ஐ.எஸ் அற்ற ஒரு வெளிச்சம் பரவுகிறது.  ஆயினும் ரஸ்ய ஆதரவு சிரிய ராணுவமும் அமெரிக்க ஆதரவு சிரிய ஜனநாயக படையினரும் மோதிக்கொள்ளாமல் இருக்கும் வரையே இந்த வெளிச்சம் இருக்கக் கூடும்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg