Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

துன்பங்களை வெளியில் சொல்ல முடியாமல் தவிக்கும் தமிழ் மக்கள்: வீ.ஆனந்த சங்கரி

In இலங்கை
Published: 15:16 GMT, Oct 17, 2017 |
0 Comments
1244
icon_com
This post was written by : Surenth

இன்றைய சூழ்நிலையில் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்துள்ள எமது மக்கள்  துன்பங்களை வெளியில் சொல்ல முடியாமல் தவித்து வருவதாக தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் வீ.ஆனந்த சங்கரி தெரிவித்துள்ளார்.

அநுராதபுர சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் அவர் இன்று (செவ்வாய்க்கிழமை) ஆதவன் செய்தி சேவைக்கு கருத்து தெரிவித்த போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

கடந்த காலங்களில் இருந்தது போன்று மக்கள் தற்போது வாழக் கூடிய நிலைமை இல்லை எனவும் எமது மக்கள் பல்வேறு துன்ப துயரங்களுக்கு முகம் கொடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

காணாமல் ஆக்கப்பட்ட மற்றும் தடுத்து வைக்கப்பட்டுள்ள உறவுகள் எந்த தீபாவளிக்கு வருவார்கள் என்ற ஏக்கத்துடன் தொடர்ச்சியாக உறவுகள் வாழ்ந்து வருவதாகவும் அவர் இதன் போது சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போதைய, தமிழ் அரசியல் தலைமைகள் அரசாங்கத்திடம் பணம் பெற்றுக் கொண்டு தமிழ் மக்களின் பிரச்சினைகளை அரசாங்கத்திற்கு கொண்டு செல்வதில் தயக்கம் காட்டுவதாகவும் அவர் கூறினார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg