Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஒரே பார்வையில் இன்றைய உலகச் செய்திகள்

In
Updated: 16:01 GMT, Oct 17, 2017 | Published: 15:55 GMT, Oct 17, 2017 |
0 Comments
1590
This post was written by : Sivaguru Siva

வாகனக்குண்டு வெடிப்பில் பலியான மோல்டாவின் புலனாய்வு இதழியலின் பெண் ஊடகர் கலிஸியாவின் புதல்வன் தனது அன்னையின் கொலைக்கு மோல்டா அரசாங்கமே காரணமென குற்றஞ்சாட்டியுள்ளார்.

மோல்டா தற்போது ஒரு மாபியா தேசம் எனக் கடுமையாக சாடிய அவர் தனது தாயை காப்பபாற்றமுடியாமல் போனமை குறித்தும் வேதனை தெரிவித்துள்ளார்.

பனாமா ஊழல் விவகாரத்தை வெளிக்கொண்டு வந்தவர்களில் முக்கிய புலனாய்வு ஊடகர் கலிஸியா.

_98345650_hi042417792

அவர் தனது பதிவுகளில் மோல்டா அரசாங்கம் பெரும் முறைகேடுகளில் ஈடுபடுவதாக தொடர்ச்சியாகவும் குற்றஞ்சாட்டிவந்தவர்.

இந்த நிலையில் நேற்று தனது வீட்டிலிருந்து வாகனத்தில் புறப்பட்டுச்சென்ற அதிலிருந்த குண்டொன்று வெடித்து பலியானார்.

இந்த நிலையில் கலிஸியா மரணம் குறித்து கருத்துவெளியிட்ட மோல்டா பிரதமர்  மஸ்கட் இது காட்டுமிரண்டித்தனமாக தாக்குதலெனவும் கருத்துச்சுதந்திரம் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்

தன்னை அரசியல் ரீதியாக கடுமையாக விமர்சித்தவர்களில் கலிசியாவும் ஒருவர் எனவும் அவர் குறிப்பிட்டார்.

.

kate-middleton-paddington-bear-949x535

கேம்பிரிட்ஜ் கோமகளும் இளவரசர் வில்லியத்தின் துணைவியுமான கேட்மிடில்ரன் தனது மூன்றாவது மகவை எதிர்வரும் ஏப்ரல் மாதம் பிரசவிப்பார் என கென்சிஸ்டன் அரண்மனை அறிவித்துள்ளது.

தொண்டு நிறுவனம் ஒன்றின் நிகழ்ச்சிக்காக நேற்று படிங்ரன் கரடி உருவத்துடன் கேட் மிடில்ரன் சுறுசுறுப்பாக நடனமாடி அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.

இந்தநிலையில் இன்று இந்த மகிழ்சிச் செய்தியை கென்சிஸ்டன் அரண்மனை அறிவித்தது.

_98352323_c3d5a989-4805-4483-94d2-9f933c52f0fc

கத்தலோனியாவில் சுதந்திர கத்தலோனா ஆர்வலர்கள் இருவருக்கு பிணை வழங்கப்படாமல் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டமைக்கு எதிராக இன்று பார்சலோனாவில் பரவலாக ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.

செப்டெம்பர் 20ஆம் திகதி, பார்சலோனாவில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டங்களுக்கு இவர்கள் இருவரும் தலைமை தாங்கிய குற்றச்சாட்டில் இவர்கள் மீது வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

yogi1

தாஜ்மஹால் பாதுகாக்கப்படுமென உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உறுதியளித்துள்ளார்.

முகலாய மன்னர்கள் இந்தியா மீது தொடர்ந்தும் படையெடுத்தவர்கள் என்பதால் அவர்களிர் ஒருவர் நிர்மாணித்த தாஜ்மஹாலை வரலாற்றில் கொண்டாட முடியாது என பாஜக சட்டமன்ற உறுப்பினர் சங்கீத் சோம் சர்ச்சைக்குரிய கருத்தைத்தெரிவித்த நிலையில் உத்தரப்பிரதேச முதல்வரின் இந்தக்கருத்து வந்துள்ளது.

இந்தியப்புதல்வர்களின் உதிரம் மற்றும் வியர்வையால் தாஜ்மஹால் எழுப்பப்பட்டதால் அது பாதுகாக்கப்படவேண்டும் எனக் குறிப்பிட்ட யோகி ஆதித்யநாத் ஆக்ராவுக்குச்சென்று சுற்றுலாத்திட்டங்களை மேற்பார்வையிடப் போவதாகவும் அறிவித்தார்.

3500

ஐ.எஸ் எனப்படும் இஸ்லாமிய அரசு 2014 இல் தனது கலிபாத் கருத்தியலை உலகுக்கு அறிவிப்பதற்கு பெரும் பின்புலமாக இருந்தது ரக்கா நகரின் கதை இன்று மாறிவிட்டது.

ரக்கா நகர் இப்போது அமெரிக்க ஆதரவு படைத்தரப்பின் கைகளில் அந்தநகர் மீதான தமது வெற்றியை அறிவிக்க தற்போது அந்தத்தரப்பு தயாராகின்றது.

2014 இல், ஐ.எஸ் ஆயுததாரிகளால் கைப்பற்றப்பட்ட பெரிய நகரங்களில் முதன்மையாக இருந்தது ரக்கா.

அதன்பின்னர் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு அது ஐ.எஸ்ஸின் இறுக்கமான கட்டுப்பாட்டில்தான் இருந்தது.

ஐ.எஸ்ஸி;டம் ரக்கா வீழ்ந்த பின்னர் அதன் குருரமான ஒரு அடையாளமாக ஐ.எஸ் ஆயுததாரிகள் வழங்கிய மரணதண்டனைகள் அமைந்தன.

பணயக்கைதிகள் அல்லது தமது ராஜ்யத்தை எதிர்பவர்கள் என எல்லோருடைய சிரசுகளை குருரமாக கொய்வது.

அல்லது எதிர்ப்பாளர்களை சிலுவையில் அறைந்த கொல்வது. மக்களை கடுமையாக சித்திரவதை செய்வது போன்ற அவலங்கள் இங்கு தினசரி; இடம்பெற்றன.

இதனையும் விட ஐ.எஸ் தலைவர் அபு பக்கர் அல் பக்தாதியின்  அழைப்பின் அடிப்படையில்  உலகின் பல பகுதிகளில் இருந்தும் ஜிகாதிகள் இங்கு குவிந்தனர்.

அவ்வாறாக ஜிகாதிகளின் பலம் பொருந்திய ஒரு நகரமாக உருவான இந்த ரக்கா மறுபுறத்தே அமெரிக்கா ரஸ்யா உட்பட்ட நாடுகளின் இலக்காகவும் அடிக்கடி மாறியது.

தினசரி அதன் மீது வான்வழித்தாக்குதல்கள் நடத்தபட்டன.  ஆயினும் ஐ.எஸ்ஸின் இந்த கலிபாத் மேற்குலகுக்கு சவாலாகவே நின்றது.

இந்த நிலையில்தான் கடந்த ஆண்டு நவம்பரில் ரக்கா நகரை கைப்பற்றும் நோக்குடன்  அதனை நோக்கிய ஒரு தரைவழி ராணுவ நகர்வை அமெரிக்க தலைமையிலான கூட்டணி ஆரம்பித்தது.

சுமார் பதினையாயிரம் பேரடங்கிய எஸ்.டி.எஃப் எனப்படும் சிரிய ஜனநாயக படையினரும் சிறப்பு படையினரும் அமெரிக்க வான்வழி தாக்குதல் உதவியுடன் கடந்த 11 மாதங்களாக  ரக்கா நோக்கிய ராணுவ நகர்வை மேற்கொண்டனர்.

இடையில் எத்தனையோ சமர்க்களங்கள். ஆயினும் மெல்ல மெல்ல முன்னேறிய அந்த அணி கடந்த யூன் மாதம் ரக்காவின் புறநகர்ப் பகுதியை சுற்றிவளைத்தது.

இதன் பின்னர் படிப்படியாக ஐ.எஸ்ஸி;ன் பாதுகாப்பு நிலைகளை தகர்த்து முன்னேறிய அந்த அணி கடந்தவார இறுதியில் ரக்காவின் மையப்பகுதியை கைப்பற்றியது.

இறுதியாக எஞ்சியிருந்த ஐ.எஸ் ஆயுததாரிகள் மற்றும் அவர்களின் குடும்பங்கள் பழங்குடித் தலைவர்களின் சமாதானப் பேச்சுக்களின் மூலம் அங்கிருந்து அகற்றப்பட்டனர். மோதலில் ஈடுபட்ட மிகுதிப்பேர் கொல்லப்பட்டனர்.

நேற்றுத்தான்  பல மாதங்களுக்குபின்னர் முதன்;முறையாக, எந்தவொரு வான்வழி தாக்குதல், மற்றும் துப்பாக்கிச்சூடு இல்லாத நாளாக ரக்காவுக்கு அமைந்தது.

மறுபுறத்தே கடந்த இரண்டு ஆண்டுகளாக சிரியா மற்றும் ஈராக்கில் தொடர்ந்தும் தமது பிடியை இழந்த ஐ.எஸ் க்கு, ரக்காவின் வீழ்ச்சியும் ஒரு கடும் பின்னடைவாகவே மாறியுள்ளது.

ஆம் தற்போது ரக்காவில் ஐ.எஸ் அற்ற ஒரு வெளிச்சம் பரவுகிறது.  ஆயினும் ரஸ்ய ஆதரவு சிரிய ராணுவமும் அமெரிக்க ஆதரவு சிரிய ஜனநாயக படையினரும் மோதிக்கொள்ளாமல் இருக்கும் வரையே இந்த வெளிச்சம் இருக்கக் கூடும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg