Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பேருந்து சாரதிகளுக்கு எச்சரிக்கை!

In இலங்கை
Published: 17:30 GMT, Oct 17, 2017 |
0 Comments
1418
icon_com
This post was written by : Surenth
11_V_Bus_Fare

நேர அட்டவணையைப் பின்பற்றி செயற்படாத பேருந்து சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மேல்மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து அந்த அதிகார சபையின் பொதுமுகாமையாளர் ஜெகத் பெரேரா கருத்து தெரிவித்த போதே இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

குறிப்பாக, மேல் மாகாணத்தில் சேவையில் ஈடுபடும் பேருந்துக்கள், சரியான முறையில் நேர அட்டவணையை பின்பற்ற தவறுவதாக குற்றசாட்டுக்கள் முன்வைக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

பேருந்துக்களுக்கு வழங்கப்பட்டுள்ள தூரத்திற்கு ஏற்ப நேரத்தை உரிய முறையில் கடைபிடிக்க வேண்டும் எனவும் இதன் மூலமே எல்லோருக்கும் உரிய முறையில் சேவை வழங்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இவ்வாறான விடயங்கள் கருத்திற் கொண்டு செயற்படாத பேருந்து சாரதிகளுக்கு எதிராக தாம் சட்ட நடவடிக்கை எடுக்க தீர்மானித்துள்ளதாக ஜெகத் பெரேரா கூறினார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg