Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

எல்லையில் மோதல்! – பாகிஸ்தான் இராணுவம் அத்துமீறித் தாக்குதல்

In இந்தியா
Published: 05:20 GMT, Oct 18, 2017 |
0 Comments
1352
This post was written by : Puvanes
pakistan001

ஜம்மு – காஷ்மீர் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் இராணுவத்தினர் இன்று காலை அத்துமீறிய தாக்குதல்களில் ஈடுபட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பூஞ்ச் மாவட்டத்தில் பாலாகோட் எனப்படும் பகுதியில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டிருந்த இந்திய இராணுவத்தினர் மீது பாகிஸ்தான் இராணுவத்தினர் தாக்குதலை நடத்தியுள்ளனர்.

இதேவேளை, எல்லைக்கட்டுப்பாட்டுக்கு அருகில் உள்ள ராஜேரியிலும் போர் நிறுத்த ஒப்பந்தத்தையும் மீயுள்ள பாகிஸ்தான் இராணுவத்தினர், துப்பாக்கி மற்றும் சிறிய ரக மோட்டார் குண்டுகள் மூலமாக தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.

இந்தியத் இராணுவத்தினரும் குறித்த தாக்குதலுக்கு பதில் தாக்குதல்களை நடத்தி வருவதாக இராணுவத் தரப்புச் செய்திகள் தெரிவித்துள்ளன.

அண்மைக்காலமாக எல்லைப்பகுதியில் மோதல் சம்பவங்கள் அதிகரித்து வருகின்ற அதே சமயம் இந்திய இராணுவம், பாகிஸ்தான் மீது தாக்குதலை நடத்த தயங்க மாட்டோம் என எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg