Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பற்றவைக்காமலே பற்றி வெடித்த பட்டாசுகள்! – தீபாவளியன்று சோகத்தில் மக்கள்

In இந்தியா
Published: 05:51 GMT, Oct 18, 2017 |
0 Comments
1624
This post was written by : Puvanes

ஒடிசா மாநிலத்தில் ரூர்கெலா பகுதியில் உள்ள பட்டாசு விற்பனை கடைத்தொகுதி ஒன்றில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு, மூவர் படுகாயம் அடைந்துள்ளனர்.

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு பட்டாசு விற்பனைகள் நாடுமுழுவதும் தீவிரமாகியுள்ளன. இந்த நிலையில் நேற்றைய தினம் குறித்த பகுதியில் உள்ள பட்டாசு விற்பனை கடை ஒன்றில் மின்சாரக் கசிவு காரணமாக தீப் பரவல் ஏற்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து வேகமாக பரவிய தீ அங்கிருந்த பட்டாசு விற்பனைக் கடைத் தொகுதி முழுவதும் பரவி சராமாரியாக வெடித்ததனால் பாரிய விபத்து ஏற்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து தீயணைப்புத்துறை தீப்பரவலை நீண்ட போராட்டங்களுக்கு மத்தியில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தாலும், சுமார் 45 கடைகள் முற்றாக எரிந்து ஒரு கோடிக்கும் அதிக சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg