Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

குசல் மெண்டிஸின் காலம் முடிந்துவிட்டது: அறிமுகமாகிறார் எதிர்கால மஹேல ஜயவர்தன

In கிாிக்கட்
Published: 07:20 GMT, Oct 18, 2017 |
0 Comments
1447
icon_com
This post was written by : Anojkiyan
DF9eXewVoAEE7Iq

இலங்கை கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட வீரரான குசல் மெண்டிஸ், சமீபகாலமாக சோபிக்க தவறிவருவதால் பாகிஸ்தான் அணிக்கெதிரான இறுதி இருபோட்டிகளிலும் புதுமுக வீரர் ஒருவரை அறிமுகப்படுத்த அணி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

இதன்படி உள்ளூர் கிரிக்கெட் தொடரில் சிறப்பான பெறுபேறுகளை வெளிப்படுத்திய, 22 வயதான சதீர சமரவிக்கிரம அணியில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளதாக கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த பாகிஸ்தான் அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமான சதீர சமரவிக்கிரம, அண்மையில் கிரிக்கெட் சபையினால் நடத்தப்பட்ட 23 வயதுக்குட்பட்ட மாகாண மட்ட போட்டிகளில் 7 போட்டிகளில் பங்கேற்று 343 ஓட்டங்கள் குவித்தது சிறந்த துடுப்பாட்ட வீரருக்கான விருதை பெற்றமை சுட்டிக்காட்டத்தக்கது.

பாகிஸ்தான் அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியின்போது சதீர சமரவிக்கிரமவை எதிர்கால மஹேல ஜயவர்த்தன என்று பாகிஸ்தானின் முன்னாள் தலைவர் வக்கார் யூனுஸ் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தோல்விகளால் துவண்டு போயுள்ள இலங்கை கிரிக்கெட் அணியை, மீள கட்டமைக்கும் பணியில் இலங்கை கிரிக்கெட் சபை ஈடுபட்டுள்ளது. இவ்வாறானதொரு நிலையில், குசல் மெண்டிஸ் அணியிலிருந்து நீக்கப்படுவது அவரது எதிர்காலத்தை கேள்விகுறியாக்கும் என கிரிக்கெட் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg