Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஊடகவியலாளர் கொலையில் திருப்பம்! – வெளிநாட்டு தடயவியல் நிபுணர்கள் உதவி

In இந்தியா
Published: 08:23 GMT, Oct 18, 2017 |
0 Comments
1263
icon_com
This post was written by : Puvanes
gouri001

பிரபல எழுத்தாளரும், மூத்த ஊடகவியலாளருமான கௌரி லங்கேஷ் கொலை வழக்கில் மூன்றாவது சந்தேகநபர் ஒருவரின் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பெங்களூரில் வசித்து வந்த கௌரி லங்கேஷ் கடந்த செப்டம்பர் 5ஆம் திகதி அவரின் வீட்டிற்கு அருகே கொடூரமாக சுட்டுக்கொல்லப்பட்டார். இதனைத் தொடர்ந்து சிறப்பு புலனாய்வுத்துறைக் குழு ஒன்று நியமிக்கப்பட்டதன் பின்னர்  விசாரணைகள் தீவிரமாக நடத்தப்பட்டு வந்தன.

கொலை நடந்த இடத்தில் இருந்த கண்காணிப்பு கமரா மூலமாக சந்தேக நபர்கள் இருவரின் படங்களை பொலிஸார்  அண்மையில் வெளியிட்டனர்.

அதனைத் தொடர்ந்து, கொலை நடந்த தினத்தில் கௌரி லங்கேஷின் வீட்டை மோட்டார் வண்டியில் இருந்து வேவு பார்த்த முக்கிய குற்றவாளி ஒருவர் தலைக்கவசம் அணிந்திருந்ததால் அவரது முகம் அடையாளம் கண்டுபிடிப்பது இழுபறியாகியிருந்தது.

பின்னர், குறித்த சந்தேக நபரைப் பிடிப்பதற்காக சிறப்பு விசாரணைக்குழுவினர் வெளிநாட்டு தடவியல் நிபுணர்களிடம் குற்றவாளியை அடையாளம் காண உதவிகளைக் கேட்டுள்ளனர்.

தற்போது குறித்த வெளிநாட்டு தடவியல் நிபுணர்களின் உதவியின் காரணமாக தலைக்கவசம் அணிந்த சந்தேக நபரின் முகம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன் அடிப்படையில் அடுத்தகட்ட விசாரணைகளில் புலனாய்வுத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இதேவேளை, கௌரி லங்கேஷை சுட்டுக்கொன்றவர்களை கண்டு பிடித்து விட்டதாக கர்நாடக உள்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி அண்மையில் ஊடகங்களிடம் தெரிவித்திருந்தார்.

எனினும் அதனைத் தொடர்ந்து அவர் இதுவரையிலும் மேலதிக தகவல்கள் எதுவும் வெளிப்படுத்தப்படவில்லை என்பது சுட்டிக்காட்டப்படத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg