Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சுவையான பீட் ரூட் வறுவல்

In
Updated: 09:14 GMT, Oct 18, 2017 | Published: 09:10 GMT, Oct 18, 2017 |
0 Comments
1625
icon_com
This post was written by : Vithushagan
imageproxy

தேவையான பொருட்கள்

 பீட் கிழங்கு -250 கிராம் 
வெங்காயம்- 50 கிராம்
செத்தல் மிளகாய்- 4
மிளகாய்த்தூள்- 2 மேசைக்கரண்டி
கறிவேப்பிலை- சிறிதளவு
உப்பு – தேவையானளவு
தேங்காய்த்துருவல் – 1/2 கப்
பெருஞ்சீரகம் -1/2 தேக்கரண்டி
எண்ணெய்- தேவையானளவு

செய்முறை

பீட் கிழங்கை தோல் நீக்கி சுத்தம் செய்து சிறு துண்டுகளக ஸ்கிறேப்பரால் துருவி வைக்கவும், அதன் பின்னர் வெங்காயத்தை சுத்தம் செய்து சிறிய அளவில் அரிந்து வைக்கவும். செத்தல் மிளகாயை சிறிய அளவில் நறுக்கி கொள்ளவும்.

அடுப்பில் பாத்திரத்தினை வைத்து , எண்ணெய் விட்டு சூடானதும் வெங்காயம், பெருஞ்சீரகம், கறிவேப்பிலை ,செத்தல் மிளகாய் சேர்த்து நன்கு அரைப்பதத்திற்கு வதக்கவும்.

வதங்கியதும் துருவிய பீற்றூட் சேர்த்து நன்கு கிளறவும் . சிறிதளவுஎண்ணெய் சேர்க்கவும்.

நன்றாக வதங்கியதும் தேங்காய்த்துருவல், தேவையான அளவு உப்பு , மிளகாய்ததூள் சேர்த்து நன்கு கிளறி சிறிது நேரத்தின் பின் இறக்கி பரிமாறவும்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg