Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கந்தசஷ்டி விரதத்தின் சிறப்பு!

In
Published: 09:58 GMT, Oct 18, 2017 |
0 Comments
2775
icon_com
This post was written by : Vithushagan
sashtiv

விரதங்களில் கலியுக வரதனும் கண்கண்ட தெய்வவுமான கந்தனின் விரதமே கந்தசஷ்டி விரதம் ஆகும். கந்தனின் சிறப்பான விரத நாட்கள் முன்றே ஆகும். அவையாவன முறையே (சுக்கிர வார விரதம், கார்த்திகை விரதம், கந்தசஷ்டி விரதம்) ஆகும். இதில் கந்தசஷ்டி விரதமே மிகச் சிறந்த விரதமாக கணிக்கப்படுகின்றது.

கந்தசஷ்டி விரதத்தின் பலன்: 

குடும்பத்தில் துன்பங்கள் நீங்கவும், வேலைவாய்ப்பு, கடன் தொல்லை நீங்கவும் இவ்விரதத்தை கடைப்பிடிப்பது நன்று. “சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்” என்பது பழமொழி. இதன் உண்மையான பொருள், சஷ்டியில் விரதமிருந்தால் கருப்பையில் குழந்தை உண்டாகும் என்பதாகும்.

எனவே குழந்தை வரம் வேண்டும் பெண்களுக்கு இது மிகவும் சிறந்த விரதமாகும். சுருக்கமாகச் சொன்னால் இவ் விரதத்தை கடைப்பிடித்து விரும்பிய  பலனைப் பெறலாம்.

கந்தசஷ்டி விரத முறைகள் :

கந்தசஷ்டி விரதம் ஒவ்வொறு வருடமும் ஐப்பசி மாதம் சுக்கிலப் பட்டத்துப் பிரதமை முதல் சஷ்டி வரையிலான ஆறு நாட்களில் முருகன் பக்த்தர்கள் கந்தசஷ்டி விரதத்தை கடைபிடித்தல் அவசியமாகும். விரதத்திற்கு முதல் நாளன்றே வீட்டினை கழுவி சுத்தப்படுத்தி மஞ்சள் நீர் தெளித்தல் அவசியம்.

விரத நாளன்று அதிகாலையில் துயிலெழுந்து நீராடி தோய்த்துலர்ந்த ஆடைகளை அணிந்து, காலையும் மாலையும் வீட்டின் சுவாமி அறையில் விளக்கேற்றி, வீபூதி பூசி, தேவராங்கள் பாடுதல் வேண்டும் அத்துடன் கோயில் வழிபாடு செய்தல் மிகவும் நன்று.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg