Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

முல்லைத்தீவு கடலில் இரு இளைஞர்களை காணவில்லை: ராணுவம் மீது குற்றச்சாட்டு

In இலங்கை
Updated: 17:08 GMT, Oct 18, 2017 | Published: 11:48 GMT, Oct 18, 2017 |
0 Comments
1594
This post was written by : Varshini

முல்லைத்தீவு கடலில் நீராடச் சென்ற இளைஞர்களில் இருவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.

க.பொ.த. உயர்தரத்தில் கற்று வரும் ஆறு இளைஞர்கள் இன்று (புதன்கிழமை) கடலுக்குச் சென்று நீராடிய போது, இருவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டதோடு, நால்வர் மீண்டுவந்துள்ளனர்.

இவர்கள் அருகிலுள்ள ராணுவ முகாமிற்குச் சென்று முறையிட்ட போதும், அது தமது பொறுப்பல்ல என்றும் கடற்படையிடம் அறிவிக்குமாறும் ராணுவத்தினர் கூறியுள்ளனர். இதனையடுத்து கடற்படைக்கு அறிவிக்கப்பட்டு ஒரு மணித்தியாலத்தின் பின்னரே கடற்படையினர் வந்ததாக மீண்டுவந்த மாணவர்கள் கூறியுள்ளனர்.

தற்போது கடற்படையின் உதவியுடன் தீவிர தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg