Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கூகுள் குரோம் ஏற்படுத்தும் மாற்றம்!

In அறிவியல்
Published: 14:59 GMT, Oct 18, 2017 |
0 Comments
1144
icon_com
This post was written by : Vithushagan
google_chrome-56a4010f5f9b58b7d0d4e6d9 (1)

பிரவுசிங் வசதிகளை அதிகரிக்கும் வகையில் கூகுள் குரோம் சில அடிப்படை அண்டிவைரஸ் அம்சங்களை இணைக்க முடிவு செய்துள்ளது.

இந்த அம்சங்கள் பிரவுசர் டீஃபால்ட் செட்டிங்ஸ்களை தானாக மாற்றி பிழைகள் நிறைந்த டூல்கள் மற்றும் பிரவுசர் எக்ஸ்டென்ஷன்களை தடுக்கும்.

விண்டோஸ் கணனிகளில் பிழை ஏற்படுத்தும் அம்சங்கள் நுழைய முற்பட்டால் வாடிக்கையாளர்களை எச்சரிக்கை செய்யும் புதிய அம்சங்களை குரோம் பிரவுசரில் கூகுள் நிறுவனம் சேர்த்துள்ளது.

அந்த வகையில் கூகுள் குரோம் பிரவுசர் வாடிக்கையாளர்களின் அனுமதியின்றி செட்டிங்ஸ் மாற்றப்படுவதைக் கண்டறிந்து, அவற்றை மீண்டும் ரீசெட் செய்யும்.

வலைத்தளங்களில் கிடைக்கும் சில தளங்கள் வாடிக்கையாளர்களின் ஹோம்பேஜ் மற்றும் டீஃபால்ட் சேர்ச் என்ஜின் உள்ளிட்டவற்றை மாற்றவோ அல்லது வாடிக்கையாளரின் அனுமதியின்றி சில செட்டிங்ஸ்களை மாற்றியமைக்கவோ செய்யும்.

இவ்வாறான சமயங்களில் குரோம் மாற்றங்களைக் கண்டறிந்து, அடுத்த முறை நீங்கள் குரோம் ஓபன் செய்யும் போது உண்மையான செட்டிங்ஸ்க்கு மாற்றக்கோரும்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg