Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

புதிய அரசியல் யாப்பு தேவையில்லை: மகாநாயக்கர்கள் தீர்மானம்!

In இலங்கை
Updated: 15:01 GMT, Oct 18, 2017 | Published: 15:01 GMT, Oct 18, 2017 |
0 Comments
1514
This post was written by : Ravivarman

நாட்டில் தற்போது புதிய அரசியல் யாப்பொன்றுக்கான தேவை இல்லை எனத் தெரிவித்து அஸ்கிரிய பீடம் மற்றும் மல்வத்து பீடம் ஆகியவற்றின் மகாநாயக்கர்கள் இணைந்து விசேட அறிக்கையினை வெளியிட்டுள்ளனர்.

குறித்த இரு பீடங்களையும் சேர்ந்த மகாநாயக்கர்களின் தலைமையில் இன்று (புதன்கிழமை) தலதா மாளிகையில் கூடிய பிரதான சங்க சபைக் கூட்டத்திலேயே இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இது குறித்து அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “புதிய அரசியலமைப்பொன்றோ அல்லது அரசியல் யாப்பு சீர்திருத்தங்களோ நாட்டுக்கு தற்பொழுது அவசியமற்றவை.

ஜனாதிபதியின் அதிகாரம் மாறாது இருக்க வேண்டும். ஒரு தொகுதி தேர்தல் முறைமைதான் ஏற்படுத்தப்பட வேண்டும். நாட்டின் முழு மகாசங்கத்தினரும் இந்த உத்தேச அரசியல் யாப்புக்கு எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர்.

அரசாங்கம் இந்த உத்தேச அரசியல் யாப்பை திரும்பப் பெற்றுக் கொள்ள வேண்டும். பழைய யாப்பே எமக்குப் போதுமானதாகும்” என அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg