Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

லண்டன் ஆலயங்களில் நடைபெற்ற தீபாவளி வழிபாடுகள்

In
Updated: 21:18 GMT, Oct 18, 2017 | Published: 21:18 GMT, Oct 18, 2017 |
0 Comments
1851
This post was written by : S.K.Guna

தீபாவளி பண்டிகை இன்று உலகம் முழுவதும் உள்ள இந்துக்களால் கொண்டாடப்பட்டு வருகின்றநிலையில் லண்டனிலும் வழிபாடுகளும் கொண்டாட்டங்களும் இடம்பெற்று வருகின்றன.

லண்டன், ஈஸ்ற்ஹாம் நகரில் அமைந்துள்ள லட்சுமி நாராயணன் கோவில் மற்றும் ஸ்ரீ முருகன் கோவில் ஆகியவற்றில் தீபாவளி சிறப்பு பூஜை வழிபாடுகள் நடைபெற்றன. இந்த பூஜை வழிபாடுகளில் பெருமளவிலான பக்தர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

இன்றையதினம் தீமைகள் விலகி நன்மைகள் பெருகிடும் நன்னாளாக விளங்குகிறது. ஆவளி என்றால் வரிசை என்று அர்த்தமாகும் அதாவது தீபங்களை வரிசையாக ஏற்றுதல் என்பது பொருளாகும்.

இந்துக்கள் புத்தாடைகளை அணிந்து இல்லங்களில் விளக்கேற்றி ஆலயங்களுக்குச் சென்று கடவுளை வணங்கி, பல வகையான இனிப்புகளையும் பலகாரங்களையும் நண்பர்களோடும் உறவினர்களோடும் பகிர்ந்துண்டு கொண்டாடுவது வழக்கமாகும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg